Word

English & Tamil Meaning
பொருள்

அசத்தன் a-cattaṉ
n. <a-šakta.
Weak, incompetent person;
வலியற்றவன், புகலரு மசத்தர் தம்பாற் பொருந்திய வலகை யேபோல் (சிவப்பிர. உண்மை, 26).

அசத்தி a-catti
n. <a-šakti.
Inability, powerlessness;
வலியின்மை. கிலேசத்தா லசத்தியாற் றுயரம் (சூத.எக்கிய.பூ. 17,15).

அசத்தியநிருவாணம் acattiya-niruvāṇam
n. <a-sadyah+.
See அசத்தியோ நிர்வாணதீட்சை.
(சித். பிர.)

அசத்தியம் a-cattiyam
n. <a-satya.
Untruth, falsehood;
பொய். அசத்திய மறியீர் (உபதேசகா. சிவத்துரோ. 128).

அசத்தியோநிர்வாணதீட்சை acattiyō-nirvāṇa-tīṭcai
n. <a-sadyah+. (Saiva.)
Kind of nirvāṇa-tīṭcai, which helps the disciple to obtain liberation at the end of his life;
நிர்வாணதீட்சை வகை. (சி.சி. 8,4, சிவஞா.)

அசத்து a-cattu
n. <a-sat.
1. That which is non-existent;
இல்லாதது. (திருக்காளத். பு. 5,44.)

2. False course;
பொய்ந் நெறி. அசத்தினிற் செல்கிலாச் சதுமுகத்தவற்கு (கம்பரா. இராவணன் வதை. 117).

3. That which is unstable;
நிலையில்லாதது. (திருக்காளத். பு. 32,40.)

4. Illusion;
மாயை. (சூத. சிவ. 8,10.)

5. Wicked person;
தீயன். Colloq.

அசதி 1 acati
n. <அயர்-.
1. Drowsiness. See அயர்தி.
.

2. Name of a shepherd, said to be the subject of Avvaiyar's Acati-k-kōvai , as having forgotten his name when he was asked;
அவ்வையாரால் அசதிக்கோவை பாடப் பெற்றவன்.

அசதி 2 acati
n. <a-satī.
Unchaste woman;
கற்பில்லாதவள். (சூடா.)

அசதி 3 acati
n. <hasiti.
1. Derisive laughter, ridicule, scoffing;
பரிகாசம். (சீவக. 2002, உரை.)

2. Banter, pleasantry;
வேடிக்கை வார்த்தை. (திவா.)

அசதிக்கோவை acati-k-kōvai
n. <அசதி-+.
Name of a love-poem in praise of Acati, attributed to Avvaiyār;
ஒருநூல்.

அசதிசன்னி acati-caṉṉi
n. <id.+.
Apoplexy;
சன்னிநோய் வகை. (W.)

அசதியாடு - தல் acati-y-āṭu-
<hasiti+. v.tr.; v.intr.
To ridicule, laugh at; To indulge in banter, pleasantry;
பரிகசித்தல். ஒறுக்கப்படுவாரிவரென்றங் கசதியாடி (சீவக. 1871). வேடிக்கை வார்த்தை கூறுதல். அமிர்தனாரோடு...வானோ ரசதியா டிடங்கள் (சூளா. சீய. 192).

அசந்தர்ப்பம் acantarppam
n. <a-sandarbha.
1. Unsuitable time;
அசமயம். அவன்வர அசந்தர்ப்பமா யிருக்கிறது.

2. Inconvenience;
சௌகரியமின்மை. அசந்தர்ப்பத்தால் கடன் கொடுக்கக் கூடவில்லை.

3. Irrelevancy;
பொருத்தமின்மை. அசந்தர்ப்பமாகப் பேசாதே. Colloq.

அசந்துஷ்டி a-cantuṣṭi
n. <a-sam-tuṣṭi.
Discontent, dissatisfaction;
திருப்தியின்மை.

அசப்பியம் acappiyam
n. <a-sabhya.
Indecent language or expression, as unfit for an assembly;
சபைக்குத் தகாதசொல்.

அசப்பு acappu
n. <அயர்2-.
Inattentiveness, absence of mind;
பராக்கு. ஒருவ ரசப்பிலேயென்னை யழைத்தபோது (அருட்பா, 6, பிள்ளைப்பெரு. 53). Colloq.

அசபா acapā
n. <a-japā.
Hamsa mantra. See அஜபை.
(தாயு. தேசோ. 6).

அசபை acapai
n.
See அசபா.
(பிரபோத 44,22.)

அசம் 1 acam
n.
Onion. See வெண்காயம்.
(மூ. அ.)

அசம் 2 acam
n. <aja.
1. Goat, sheep;
ஆடு. (பிங்.)

2. He-goat;
வெள்ளாட்டேறு. (பிங்.)

அசம் 3 acam
n. <a-ja.
1. That which is not born, as the Supreme Being;
பிறவாதது. அச மனந்த மவிநாசி (கைவல்ய.சந்தேக.137).

2. Three-year-old paddy;
மூன்றுவருடத்து நெல். (W.)

3. Heap of paddy;
நெற்குவை. (தைலவ.தைல. 47.)

அசம் 4 acam
n.cf. malaya-ja.
Sandalwood;
சந்தனம். (மலை.)

அசம்பந்தம் a-campantam
n. <a-sambandha.
Unconnectedness, irrelevancy;
தொடர்பின்மை.

அசம்பவம் a-campavam
n. <a-sambhava.
1. Impossibility, improbability;
நேரக் கூடாமை.

2. Inconsistency;
ஒவ்வாமை.

3. (Log.) Fault of total inapplicability of a definition, one of three tōṣam, q.v.;
கூறும் இலக்கணம் இலக்கிய மொன்றினும் இல்லையாகும் குற்றம். (தருக்கசங்.)

அசம்பவாலங்காரம் a-campavālaṅkāram
n. <id.+alaṅkāra.
Figure of speech in which the impossible is imagined;
கூடாமையணி. (அணியி. 36.)

அசம்பாவிதம் a-campāvitam
n. <a-sam-bhāvita.
1. That which cannot happen;
நேரக்கூடாதது.

2. That which is inconsistent;
பொருத்தமில்லாதது.

அசம்பி acampi
n. [K. hasumbe.]
Bag. See அசம்பை.
(W.)

அசம்பிரஞ்ஞாதசமாதி a-campiraāta-camāti
n. <a-sam-prjāta+. (Yōga.)
See நிர்விகற்பசமாதி.
.

 
28