Word

English & Tamil Meaning
பொருள்

அசம்பிரேட்சியகாரித்துவம் a-campirēṭciya-kārittuvam
n. <a-sam-prēkṣya-kāri-tva.
Action without forethought;
ஆராயாது செயல். (பஞ்சதந்.)

அசம்பை acampai
n. [T.asimi, K. hasumbe.]
Traveller's bag thrown over the shoulder;
பிரயாணிகளின் தோட்பை. (W.)

அசம்மதம் a-cammatam
n. <a-sam-mata.
Dissent;
உடன்பாடின்மை.

அசம்மதி a-cammati
n. <a-sam-mati.
See அச்சம்மதம்.
.

அசமஞ்சசம் a-camacacam
n. <a-samajasa.
That which is inconsistent, improper;
பொருத்த மில்லாதது.

அசமஞ்சன் acamacaṉ
n. <a-samaja.
1. Name of the cruel son of Sagara;
சகரன் மகன். (பாகவத. 9,6,16.)

2. Ill-behaved person, wicked man;
தீயவன்.

அசமதாகம் acamatākam
n. <ajamōdikā.
Omum. See ஓமம்.
(மலை.)

அசமந்தம் 1 acamantam
n.
See அசமந்திபம்.
(W.)

அசமந்தம் 2 acamantam
n. prob. aja+manda.
Sloth, indolence;
மந்தம். Colloq.

அசமந்திபம் acamantipam
n. cf. aš-manta.
Downy climbing cluster fig. See மலையத்தி.
(மலை.)

அசமயம் a-camayam
n. <a-samaya.
Unsuitable, inconvenient, unpropitious, or improper time;
பொருத்தமற்ற வேளை.

அசமர்த்தன் a-camarttaṉ
n. <a-samartha.
Weak, inefficient man;
சாமர்த்திய மில்லாதவன்.

அசமருதம் acamarutam
n.
Country fig. See அத்தி.
(மலை.)

அசமுகி aca-muki
n.<aja-mukhī
Name of the sister of Sūra-padma, as goat-faced;
சூரபதுமன் தங்கை. (கந்தபு.)

அசமோதகம் acamōtakam
n.<ajamō-dika.
Omum. See ஓமம்.
(மூ.அ.)

அசமோதம் acamōtam
n.<ajamōdā.
See அசமோதகம்.
.

அசர் - தல் acar-
4 v.intr. <அயர்1-. [K.asur.]
To become faint, drowsy;
அயர்தல். அசர்ந்து தூங்கிவிட்டேன். Colloq.

அசர்த்து - தல் acarttu-
5 v.tr. caus. of அசர்-.
To cause to be drowsy or sluggish;
அயர்த்துதல். Colloq.

அசரப்போடு - தல் acara-p-pōṭu-
v.tr. <அசர்+.
To shelve, defer consideration of, allow to lie over;
தாமதிக்க விடுதல். Colloq.

அசரம் a-caram
n. <a-cara.
Motionless things;
நிலைத்திணை. அசர சர பேதமான (தாயு. சின். 4).

அசராது acarātu
n. cf. rāja-taru.
Indian laburnum. See கொன்றை.
(மூ.அ.)

அசரீரி a-carīri
n. <a-sarīrin.
1. Incorporeal being;
சரீரமில்லாதது. (சி. சி. 1,38, ஞானப்.)

2. Voice from heaven, utterance of an invisible speaker;
ஆகாசவாணி. என்றது வானினிடத் தசரீரி (பாரத. புட்ப. 79).

அசரை acarai
n. <அயிரை.
Loach, sandy colour, Cobitis thermalis;
அயிரைமீன். (W.)

அசல் 1 acal
n. <அயல்1-
1. Vicinity, neighbourhood;
சமீபம்.

2. That which is foreign, strange;
அன்னியம். (அக. நி.)

அசல் 2 acal
n. <அசவல்.
Mosquito;
கொதுகு. பெருங்காற்றின் மேவசலென்று (தைலவ. தைல. 33).

அசல் 3 acal
n. <U.aṣl.
1. The original;
மூலமானது.

2. Principal, capital;
முதல். அசலும் வட்டியும்.

3. That which is excellent, first-rate;
உயர்ந்தது.

அசல்குறிப்பு acal-kuṟippu
n. <id.+.
Day-book;
தினசரிக் குறிப்பு.

அசல்பிளந்தேறிடு - தல் acal-piḷantēṟiṭu-
v.tr. <அயல்1+.
To transfer, as one's merits to friends and sins to enemies on one's attaining final bliss;
பிறரிடஞ் சேர்ப்பிக்கை. (அஷ்டாதச. அர்ச்சி. ப்ர. 1.)

அசல்பேரீஜ் acal-pērīj
n. <U. aṣl+.
Standard or original assessment of the land revenue without any extra cess (R.F.);
ஆதிநிலவரித்திட்டம்.

அசல்வியாஜ்யம் acal-viyājyam
n. <id.+.
Original suit;
ஒழுங்கு வியாஜ்யம்.

அசல்ஜமா acal-jamā
n. <U.id.+.
Original rent or revenue charged upon lands without any extra cess, also the amount taken as the basis of a revenue settlement. (R.F.)
.

அசலகம் acal-akam
n. <அயல்1+.
Neighbouring house, next door. See அயலகம்.
(திவ். பெரியாழ். 2,9,6.)

அசலசலம் acala-calam
n. <a-cala+.
Liṅga that is both immovable and movable, as permanently fixed in an altar for initiation, or daily taken out for private worship;
சிவலிங்கபேதம். மண்டலமுங் காணி னசலசலம் (சைவச. பொது. 123).

அசலம் a-calam
n. <a-cala.
1. That which is fixed;
அசையாதது. அசித்தா யசலமாகி (சிவப்பிர. பொது, 10).

2. Mountain;
மலை. (திவா.)

3. Immovable Liṅga, as the temple gōpura;
சிவலிங்க பேதம். கோபுரமாதி யசலம் (சைவச. பொது. 122).

 
29