Word

English & Tamil Meaning
பொருள்

அசலர் acalar
n. <அயல்1.
Neighbours, strangers;
அயலார். அசலருஞ் செச் செச் செச் செயென (திருப்பு. 418).

அசலன் acalaṉ
n. <a-cala.
1. One who is motionless;
அசைவிலாதவன். இந்த ஆன்மா அசரீரியுமா யசலனுமாய் (சி. சி. 8,6, மறைஞா.)

2. God, as motionless;
கடவுள்.

3. Arhat;
அருகக் கடவுள். (திவா.)

அசலை acalai
n. <a-calā.
1. Earth;
பூமி. அசலை மங்கை (கந்தபு. இரணியன்யு. 56).

2. Pārvatī;
பார்வதி. (கூர்மபு. திருக்கல். 20.)

அசவல் acaval
n.
Gnat;
கொதுகு. (சூடா.)

அசவாகனன் aca-vākaṉaṉ
n. <aja+.
Agni, as riding a goat;
அக்கினிதேவன்.

அசவை acavai
n. <a-japā.
Hamsa mantra. See அஜபை.
(W.)

அசற்காரியம் a-caṟ-kāriyam
n. <a-sat+.
Bad or improper deed;
தகாதசெய்கை.

அசற்காரியவாதம் a-caṟ-kāriya-vātam
n. <id.+.
Creationistic doctrine of causation according to which the effect does not exist before its production;
உற்பத்திக்குமுன் இல்லமலே காரியந் தோன்றுமென்னுங் கொள்கை. (சித். மர. கண். 11.)

அசற்சரக்கு acaṟ-carakku
n. <U.aṣl+.
1. Goods of the first quality;
முதற்றரமான பண்டம்.

2. Pure article, opp. to adulterated, as ghee;
கலப்பற்ற பண்டம்.

3. Natural drug, opp. to வைப்புச் சரக்கு;
இயற்கை மருந்துச்சரக்கு.

அசற்சீட்டு acaṟ-cīṭṭu
n. <id.+.
Original bond.
.

அசற்சூத்திரர் a-caṟ-cūttirar
n. <a-sat+.
Sūdras who do not abstain from animal food and are not religious;
மாமிச பக்ஷணமொழியாது சமயாசாரமின்றி யிருக்குஞ் சூத்திரர். (சி. போ. பா. சிறப்புப் புது.)

அசற்பாத்திரம் a-caṟ-pāttiram
n. <a-sat+..
Unworthy recipient;
தானம்பெறத் தகுதியற்றவன்.

அசற்பிரதி acaṟ-pirati
n. <U.aṣl+.
1. The original;
மூலப்பிரதி.

2. Fair copy;
சுத்தப்பிரதி. (W.)

அசறு acaṟu
n. cf. அயறு.
1. Mud, mire;
சேறு. (பிங்.)

2. Dandruff, scurf;
தலைப்பொடுகு. Colloq.

3. Scab in sheep and goats;
ஆடுகளுக்குண்டாகும் கொடுஞ் சொறிநோய்.

4. Minute insect that sticks on leaves and injures plants;
செடிப் பூச்சி வகை.

அசறுபாய் - தல் acaṟu-pāy-
v.intr. <அசறு+
To trickle;
அசும்பொழுகுதல். (திவ். பெரியாழ். 5,4,8, வ்யா.)

அசன் 1 acaṉ
n. <a-sat. (Log.)
Fallacy of illustrating the invariable concomitants between the middle term and the major term with a non-existent thing;
திருஷ்டாந்தப்போலிகளு ளொன்று. சன்னு மசன்னு மென்றிரு வகையாம் (மணி. 29, 362).

அசன் 2 acaṉ
n. <a-ja
1. Being without birth, as the Deity;
பிறப்பிலி. (W.)

2. Name of the father of Dasaratha. See அயன்.
(W.)

அசன்றிகா acaṉṟikā
n.
Species of Cleome. See தைவேளை.
(மலை.)

அசனபன்னி acaṉa-paṉṉi
n. <asana-parṇi.
Common sesban. See சிற்றகத்தி.
(மலை.)

அசனம் 1 acaṉam
n. <ašana.
1. Food;
உணவு. கொடுப்பி னசனங் கொடுக்க (நான்மணி. 81).

2. Boiled rice;
சோறு. (சூடா.)

3. Hunger;
பசி. (பிங்.)

4. Fat;
கொழுப்பு. (பிங்.)

அசனம் 2 acaṉam
n. cf. amsa.
1. Portion;
பகுதி. (பிங்.)

2. Measure;
அளவு. (பிங்.)

அசனம் 3 acaṉam
n. <asana.
Indian kino-tree. See வேங்கை.
(பிங்.)

அசனவேதி acaṉa-vēti
n. prob. ašana-bhēdin.
1. Cumin. See சீரகம்.
(இராசவைத். 37.)

2. Digestive;
போசனகுடாரி. (இராசவைத். 52.)

அசனாமிர்ததைலம் acaṉāmirta-tailam
n. <asana+amrta+.
Unguent made of the bark of Pterocarpus marsupium, Tinospora cordifolia and other herbs;
வேங்கைப்பட்டை சீந்தில் முதலியவற்றினின்றும் வடிக்கும் ஒருவகைத் தைலம். (தைலவ. தைல. 47).

அசனி acaṉi
n. <ašani,
1. Thunderbolt;
இடி. பெருவிற லசனி (ஞானா. 19).

2. Weapon of Indra;
வச்சிராயுதம். (பிங்.)

3. Frankincense leaf;
சாம்பிராணியிலை. (இராசவைத்.)

அசனிபாதம் acaṉi-pātam
n. <id.+ pāta.
Stroke of lightning;
இடியின்வீழ்ச்சி. (சி.சி. 11, 7, சிவாக்.)

அசனியேறு acaṉi-y-ēṟu
n. <id.+.
Thunderbolt;
இடியேறு. அசனியேறென வுரப்பி (கூர்மபு. அந்தகா. 61).

அசா acā
n. <அயா.
Languor, faintness;
தளர்ச்சி. அசாஅத்தா னுற்ற வருத்தம் (நாலடி. 201).

அசாக்கிரதை a-cākkiratai
n. <a-jāgrattā.
Inattentiveness, heedlessness, carelessness.
.

அசாகளத்தனம் acā-kaḷa-t-taṉam
n. <ajā+gala+stana.
Nipple or fleshy protuberance hanging down from the neck of goats;
ஆட்டின்கழுத்திற் றொங்குஞ் சதை. அசாகளத்தனம் போல அதிக சங்கியை கொள்வது எற்றிற்கு? (சிவசமவா. 39).

 
30