Word

English & Tamil Meaning
பொருள்

அசாசி acāci
n. <ajājī.
1. Black cumin. See கருஞ்சீரகம்.
.

2. Gulancha See சீந்தில்.
.

அசாணிமூலி acāṇi-mūli
n.
Species of Daemia. See. வேலிப்பருத்தி.
(மலை.)

அசாத்தியம் acāttiyam
n. <a-sādhya.
1. That which is impracticable, impossible of accomplishment;
சாதிக்க முடியாதது. (சி.சி.அளவை. 1. சிவாக்.)

2. See அசாத்திய ரோகம்.
.

அசாத்தியரோகம் acāttiya-rōkam
n. <id.+.
Incurable disease, one of three rōkam, q.v.;
தீர்க்கக்கூடாத நோய்.

அசாத்திரமுயற்சி acāttira-muyaṟci
n. <a-šāstra+.
Religious ceremonies in vogue though not sanctioned by Sāstras, dist. fr. சாத்திரமுயற்சி;
சாத்திரவிதியின்றி ஆசாரம்பற்றிச் செய்யும் சடங்கு. (W.)

அசாதாரணம் a-cātāraṇam
n. <a sādhāraṇa.
1.That which is not common, special thing, rarity;
சிறப்பானது. (ஈடு, 6,1,7.)

2. Fallacy of hētu being found neither in a place where sādhya exists nor in a place where it does not exist;
ஏதுப்போலிகளூ ளொன்று. (மணி. 29,212.)

அசாதி acāti
n. cf. aja-pati.
Mars, as ruling the astrol. house Aries;
மேடாதிபனாகிய செவ்வாய்க் கிரகம். (சங். அக.)

அசாந்தன் a-cāntaṉ
n. <a-sānta.
Restless man, one without tranquillity;
அமைதியில்லாதவன். விரவசாந்தர்கள் (ஞானவா. சுரகு.41).

அசாமி acāmi
n. <U. asāmī.
An individual. See ஆஸாமி.
Colloq.

அசாயசூரன் acāya-cūraṉ
n.
Dial. var. of அசகாய சூரன்.
.

அசாரம் 1 a-cāram
n. <a-sāra.
1. That which is sapless;
சாரமற்றது.

2. That which is without strength or value, which is unsubstantial;
பயனற்றது.

அசாரம் 2 acāram
n. <U. hazar. [T. ajāramu, K. ajāra.]
Royal audience-hall;
ஆஸ்தானமண்டபம்.

அசாரவாசி acāra-vāci
n. <id.+.
Watchman of the king's gate;
அரசன்வாயில் காவலன். ஒருபூசல் உண்டென்று கூறிய அசாரவாசிக்கு (சீவக.430, உரை).

அசாவிடு - தல் acā-viṭu-
v.intr. <அசா+.
To rest;
இளைப்பாறுதல். இரைதேர்ந்துண் டசாவிடூஉம் புள்ளினம் (கலித். 132,3).

அசாவு - தல் acāvu-
5 v.intr. <அயாவு-.
To droop, languish, grow slack;
தளர்தல். அருமை யுடைத்தென் றசாவாமை வேண்டும் (குறள், 611).

அசாவேரி acāvēri
n. <āsāvarī. (Mus.)
A specific melody-type adapted for spring time;
வசந்தகால ராகங்களூ ளொன்று. (பரத. இராக. 77.)

அசாஸ்திரீயம் a-cāstirīyam
n. <a-sāstrīya.
That which is contrary to the Sastras;
சாஸ்திர விரோதமானது.

அசி 1 aci
n. <asi.
1. Sword, knife;
வாள். (திவா.)

2.Weapon;
படைக்கலம். (சூடா.)

அசி 2 aci
n. <hasi.
Derisive laughter;
அவமதிச்சிரிப்பு. (சூடா.)

அசி 3 - த்தல் aci-
11 v.intr. <has.
To laugh;
சிரித்தல். புள்ளெலா மசிப்ப போன்று (சீவக. 659.)

அசி 4 - த்தல் aci-
11 v.tr. <aš.
To eat, consume;
உண்டல். (தேவா. 867,3.)

அசிகை acikai
n. cf. hāsikā.
Mirthful conversation;
நகைத்துப்பேசும் பேச்சு. கசுகுசென்னவே சொல் லசிகை யென்னடி (மதுரகவி.4).

அசிங்கம் aciṅkam
n. <a-sahya.
1. Uncleanness, impurity, as unbearable;
அசுத்தம், அசிங்கமான இடம். Colloq.

2. Disorder, repulsiveness;
அவலட்சணம். அசிங்கமான வேலை. Colloq.

அசித்தம் acittam
n. <a-siddha. (Log.)
Fallacy of hētu being unsustainable;
ஏதுப்போலிகளூ ளொன்று. (மணி.29,192.)

அசித்தி acitti
n. <a-siddhi.
Incompleteness, failure;
கைகூடாமை. தாவறு மசித்தி சித்தி தம்மி லலையாதே (பிரபோத. 27,80)

அசித்து a-cittu
n. a-cit.
That which is non-intelligent, matter;
சடப்பொருள். சித்த சித்தொ டீசனென்று செப்புகின்ற மூவகைத் தத்துவத்தின் (பாரத. பதினைந்.1).

அசிதம் 1 acitam
n. <a-sita.
Blackness;
கருமை. அசித வெங்கட லுண்டு (இரகு. குச. 83).

அசிதம் 2 acitam
n. <Ajita.
An ancient Saiva Scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.;
சிவாகமத்து ளொன்று. (சைவச பொது. 331, உரை.)

அசிதர் acitar
n. <id.
Name of Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.;
தீர்த்தங்கரருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.)

அசிதாம்புருகம் acitāmpurukam
n. <a sita+ambu-ruha.
Blue water-lily. See நீலோற்பலம்.
(மலை.)

அசிதாரு aci-tāru
n. <asi+taru.
Hell in which sword-like trees form instruments or torture;
நரகவிசேஷம். (சிவதரு. சுவர்க்க. 115.)

 
31