Word

English & Tamil Meaning
பொருள்

அசிதாலவனம் aci-tāla-vaṉam
n. <id.+.
Hell in which sword-like palmyra palms form instruments of torture;
நரகவிசேக்ஷம். (சிவதரு சுவர்க்க. 145.)

அசிதை acitai
n. <asitā. (Saiva.)
1. A form of Parā-sakti, one of four;
பராசத்திபேதம். (சைவச. பொது. 74, உரை.)

2. Indian indigo, See அவுரி.
(L.)

அசிந்திதன் acintitaṉ
n. <a-cintita.
One who is inconceivable or incomprehensible;
மனத்துக்கெட்டாதவன். (சி.போ.சிற். 12,3,1.)

அசிந்தியம் acintiyam
n. <a-cintya.
1. That which is inconceivable;
சிந்தைக்கெட்டாதது.

2. The number 1000 quadrillions;
ஒரு பேரெண். (W.)

அசிபத்திரகம் acipattirakam
n. <asipatraka.
Sugar-cane. See கரும்பு.
(மலை.)

அசிபத்திரம் acipattiram
n. <Asi-patra.
Hell where trees have leaves as sharp as swords;
நரகவிசேக்ஷம். அசிபத்திரமெனும்...நரகிடை (குற்றா தல. கவுற்சன. 67).

அசிபத்திரவனம் acipattira-vaṉam
n. <id.+.
See அசிபத்திரம்.
(சேதுபு.தனுக். 3.)

அசிர் - த்தல் acir-
11. v.tr. <அயிர்-.
To doubt;
சந்தேகித்தல். தாய்வழியை நினைத்து அசிர்த்தாரிறே (ஏடு,6,7,1).

அசிரி aciri
n. <a-šri.
Dirty fellow;
ஆபாசமானவன். Loc.

அசினம் aciṉam
n. <ajina.
Hairy skin of an animal, esp. black buckskin, used as a seat or covering and for other purposes;
விலங்குகளின் தோல். நன்னூ லுடன்பூ ணசினத்தை (பாரத.நச்சுப்.17.)

அசீதளம் a-cītaḷam
n. <a-šītala.
Camphor;
கர்ப்பூரம். துல்லிய மசீதளம் பூலாங் கிழங்கசை (தைலவ.தைல.6.)

அசீதி 1 acīti
n. <ašīti.
Eighty;
எண்பது. அதற்கு நீள மசீதியு மைந்துமால் (சிவதரு.கோபுர.86).

அசீதி 2 acīti
n. <ṣad-ašīti.
Beginning of the 3rd, 6th, 9th and 12th solar months, considered sacred;
ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு. (சைவச.பொது.15.)

அசீர்த்தி acīrtti
n. <a-jīrti.
Indigestion;
அசீரணம், அக்கினிதேவற் கசீர்த்தியென்று (ஒழிவி. கிரியைக்.3).

அசீரணசுரம் a-cīraṇa-curam
n. <ajīrṇa+jvara.
Fever caused by indigestion.
.

அசீரணபேதி acīraṇapēti
n. <id.+.
Diarrhoea from indigestion undigested discharges.
.

அசீரணம் a-cīraṇam
n. <a-jīrṇa.
1. Indigestion;
செரியாமை.

2. That which is unimpaired;
அழிவுபடாதது. அசீர்ணமாஞ் சித்துருவால் (ஞானவா. சிகித். 13).

அசீரணவாயு a-cīraṇa-vāyu
n. <id.+.
Flatulence from indigestion.
.

அசீரியம் acīriyam
n. <a-jīrya.
That which is indestructible;
அழியாதது. அக்கிராகிய மசீரியம் (சூத.எக்கிய.பிரம.10,13).

அசீவம் acīvam
n. <a-jīva. (Jaina.)
Things inanimate, opp. to சீவம், one of navapatārttam, q.v.;
நவபதார்த்தங்களூ ளொன்று. (சீவக. 2814, உரை.)

அசுக்காட்டு - தல் acu-k-kāṭṭu-
v.tr. <has+.
To ridicule, mock;
பரிகசித்தல். (திவ்.திருப்பா. 28,வ்யா.)

அசுகம் a-cukam
n. <a-sukha.
Illness;
அசௌக்கியம்.

அசுகுசு - த்தல் acukucu-
11 v.intr.
1 To feel disgust;
அருவருத்தல். (W.)

2. To suspect;
சமுசயித்தல். (W.)

அசுகுணி acukuṇi
n.
1. A small insect breeding and feeding on plants;
செடிப்பூச்சி வகை. (W.)

2. Kind of eruption, chiefly about the ears;
காதில்வரும் கரப்பான். (W.)

அசுகை acukai
n.
1. Dial. var. of அசூயை
.

2. Conjectural circumstance;
ஐயம். (W.)

அசுசி acuci
n. <a-šuci.
Impurity, uncleanness;
அசுத்தம், தேறா ரசுசியென் றகல்வார் (நல்.பாரத.உமாமகே. 58).

அசுணம் acuṇam
n.
A creature believed to be so susceptible to harmony that when it is fascinated by notes of music, a sudden loud beat of the drum causes its instantaneous death;
இசையறிவதோர்விலங்கு. (நற்.304.)

அசுணமா acuṇa-mā
n.
See அசுணம்.
(சீவக. 1402.)

அசுணன் acuṇaṉ
n. <lašuna.
Garlic. See வெள்வெண்காயம்.
(மலை.)

அசுத்ததத்துவம் a-cutta-tattuvam
n. <a-šuddha+. (Saiva.)
Impure categories, one of three classes of tattuvam, q.v., comprising 4
அந்தக்கரணம், 5 ஞானேந்திரியம், 5. கருமேந்திரியம், 5 தன்மாத்திரை, 5 பூதம்; தத்துவவகை. (சிவப். கட்.)

அசுத்தப்பிரபஞ்சம் a-cutta-p-pirapacam
n. <id.+. (Saiva.)
Impure universe evolved out of a-cutta-māyai and comprising the 30 categories from kalā-tattuvam to pirutivi-tattuvam;
கலாதத்துவமுதற் பிருதிவிதத்துவ மீறாகிய தத்துவம்.

 
32