Word

English & Tamil Meaning
பொருள்

அசுத்தம் a-cuttam
n. <a-šuddha.
1. Impurity, foulness;
சுத்தமின்மை.

2. Ceremonial impurity, pollution;
தீட்டு. (திவா.)

3. Inaccuracy, incorrectness;
திருத்தமின்மை.

4. Excrement;
மலம். சூகரங்க ளசுத்த மேவி யளைந்து (சி.சி.பர.லோகா.மறு. 28).

அசுத்தமாயை a-cutta-māyai
n. <id.+. (Saiva.)
Impure Māyā, the material cause of a-cutta-p-pirapacam, dist. fr. சுத்தமாயை, as tending to yield pain as well as pleasure;
அசுத்தப் பிரபஞத்துக்கு முதற்காரணமான மாயை. (சி.சி.1,19, மறைஞா.)

அசுத்தன் acuttaṉ
n. <id.
Person impure in body or mind;
சுத்தமற்றவன்.

அசுத்தாத்துவா acuttāttuvā
n. <id.+. adhavan.
See அசுத்த தத்துவம்.
(ஞானா. கட்.)

அசுத்தாவி a-cuttāvi
n. <id.+ ஆவி.
Unclean spirit, demon;
பிசாசு. chr

அசுத்தி a-cutti
n. <a-šuddhi,
Impurity, uncleanness;
சுத்தமின்மை.

அசுத்தை a-cuttai
n. <a-šuddhā.
Unchaste woman;
ஒழுக்கமற்றவள். அசுத்தை யென்றே யறிந்துவைத் தவளை நீத்தோம் (உத்தரரா.சீதை.56).

அசுப்பு acuppu
n.
1. Suddenness, quickness;
சடிதி. அசுப்பிலே சாகிறது. (R.)

2. Spying;
உளவறிகை. (சங்.அக.)

அசுபக்கிரகம் a-cupa-k-kirakam
n. <a-šubha+.
Malevolent planet;
தீக்கோள். சுபா சுபக் கிரகம் (விதான. மரபி. 2, உரை).

அசுபக்கிரியை a-cupa-k-kiriyai
n. <id.+.
Inauspicious rites or ceremonies, as for the dead;
அமங்கல கருமம். ஈன்றோர்க் கன்றிப் பல் லசுபக் கிரியைசெயல் (திருவானைக். கோச்செங். 41).

அசுபம் a-cupam
n. <a-šubha.
1. Inauspiciousness, unpropitiousness;
அமங்கலம். சுபாசுபங்க ளென்னுந் துன்றுமுளை (ஞானவா. உபசாந்தி.17).

2. Death;
சாவு.

3. See அசுபக்கிரியை.
தாழ்வு பெறு சிராத்தமுத லசுபத்தும் (திருவானைக். கோச்செங்.41).

அசும்பு 1 - தல் acumpu-
5 v.intr.
1. To flow;
ஒழுகுதல். அசும்பு பொன்வரை (சீவக.533).

2. To spread, be diffused;
பரவுதல். அவிரொளி யசும்ப (காஞ்சிப்பு. பன்னிரு 164).

அசும்பு 2 acumpu
n. <அசும்பு-
1.Spring;
ஊற்று. (பிங்.)

2. Well;
கிணறு. (திவா.)

3. Ooze, exudation;
நீர்ப்பொசிவு. அசும்பிவர் சாரல் (சீவக. 522).

4. Soft mud;
சேறு. (பிங்.)

5. Miry place, mudhole;
பொல்லாநிலம். (திவா.)

6. Minute drop of water;
சிறுதிவலை. (திருக்கோ.149.)

7. Connection, adherence;
பற்று. அசும்பறத் துடைதும் (ஞானா.41).

8. Blemish, fault;
குற்றம். அசும்பற வகன்ற ஞானத் துறவனே (சேதுபு. சங்கர 92).

அசுமரி acumari
n. <ašmarī. (Med.)
Calculus;
கல்லடைப்பு. (பைஷஜ.)

அசுமலோஷ்டிரநியாயம் acumalōṣṭira-niyāyam
n. <ašman+lōsta+.
Maxim of the stone and clod, used to denote relative superiority and inferiority as clod is hard compared with cotton but soft compared with stone;
ஒனறொடு சீர்தூக்கி ஒன்றற்குச் சிறுமை பெருமை கற்பிக்கும் நெறி.

அசுமாரோபணம் acumārōpaṇam
n. <id.+ārōpaṇa.
Ceremony of the bridegroom's placing the bride's right foot on the grinding stone;
அம்மி மிதிக்கை. (சீவக.2464, உரை.)

அசுமாற்றம் acumāṟṟam
n.
1. Very slight indication, hint;
சாடை. (J.)

2. Suspicion;
சமுசயம். (J.)

அசுமானகிரி acumāṉakiri
n. <U. āsmāngīrī.
Canopy, tester;
மேற்கட்டி.

அசுயை acuyai
n. <asūyā.
Dial. var. of அசூயை.
.

அசுர் acur
n. <asura.
A class of demons. See அசுரர்.
அசுரை செற்ற... மாதவன் (திவ்.இயற்.திருவிருத்.67).

அசுரகிருத்தியம் acura-kiruttiyam
n. <id.+.
Marvellous work, Herculean labour, as of demons;
அசுரர் செய்தற்குரிய அருஞ்செயல்.

அசுரகுரு acura-kuru
n. <id.+.
Venus, as preceptor of the Asuras;
சுக்கிரன்

அசுரசந்தி acura-canti
n. <id.+.
Evening twilight;
அந்திநேரம்.

அசுரநாள் acura-nāḷ
n. <id.+.
The 19th nakṣatra. See மூலம்.
(பிங்.)

அசுரம் acuram
n. <asura.
Acquirement of a bride by the successful performance of some valiant deed enjoined by her father, as the seizing of a wild bull;
கொல்லேறு கோடல் முதலிய வீரச்செயல் புரிந்து மகட்கோடல். (தொல்.பொ.93,உரை.)

அசுர - மணம் acura-maṇam
n. <id.+.
See அசுரம்.
.

அசுரமந்திரி acura-mantiri
n. <id.+.
Venus, as minister of the Asuras;
சுக்கிரன். (திவா.)

அசுரர் acurar
n. <id.
A class of demons at war with the gods, prob. dānavas as dist. fr. daityas, one of patineṇ-kaṇam, q.v.;
பதினெண் கணத்துள் ஒரு கணம். (திவா.)

அசுரவைத்தியம் acura-vaittiyam
n. <id.+.
Surgery;
இரணவைத்தியம். (W.)

 
33