Word

English & Tamil Meaning
பொருள்

அசுரற்றடிந்தோன் acuraṟṟaṭintōṉ
n. <id.+ தடி-
Skanda, as the slayer of Sūrapadma;
முருகக்கடவுள்.

அசுவகதி acuva-kati
n. <ašva+.
1. Speed of horse;
குதிரைநடை.

2. Paces of horse, viz.,
(a) மல்லகதி, மயூரகதி, வானரகதி, சசகதி, சரகதி (திவா.), வியாக்கிரகதி for சசகதி (சூடா.), விடபகதி and வியாக்கிரகதி for சசகதி and சரகதி(சது.) or (b) தௌரிதகம், ஆக்கிரந்திதம், வற்கிதம், இரேசிதம், புலுதம் (W.)

அசுவகந்தி acuvakanti
n. <ašva-gandhā.
Species of Withania. See அமுக்கிரா.
(மலை.)

அசுவசாஸ்திரம் acuva-cāstiram
n. <ašva+.
Hippology;
குதிரையியல்புகூறும் நூல்.

அசுவணி acuvaṇi
n.
Eczema;
சொறி. Loc.

அசுவத்தம் acuvattam
n. <ašvattha.
Pipal. See அரசு.
(மு.அ.)

அசுவத்தாமா acuvattāmā
n. <ašvaitthāmā.
Name of a great warrior, son of Drōṇa;
துரோணாசாரியர் மகன்.

அசுவத்தை acuvattai
n. prob. ašvattha.
1. Indian mast-tree See நெட்டிலிங்கம்.
(L.)

2. Wynaad coffee cherry-nutmeg. See நெடுநாரை
(L.)

அசுவதட்டிரம் acuva-taṭṭiram
n. cf. ašva-damṣṭra.
Tribulus plant. See நெருஞ்சி.
(மலை.)

அசுவதி acuvati
n. <ašvini.
The first nakṣatra. See அச்சுவினி.
(தணிகை. திருநகர. 31.)

அசுவபரி acuva-pari
n. cf. ašva-māra.
Oleander, as horse-killer. See அலரி.
(W.)

அசுவபரீட்சை acuva-parīṭcai
n. <ašva+.
Scientific study of the horse, hippology, one of aṟupattunālu-kalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் குதிரையிலக்கணமறியும் வித்தை.

அசுவம் 1 acuvam
n. <ašva.
1. Horse;
குதிரை.

2 A mineral poison;
குதிரைப்பற் பாஷாணம். (மூ.அ.)

அசுவம் 2 acuvam
n. <ašva-gandhā.
Species of Withania. See அமுக்கிரா.
நாரி யறுகசுவ நிலவாகை (தைலவ. தைல.125).

அசுவமேதம் acuva-mētam
n. <ašva+.
Horse-sacrifice;
ஓர் யாகம்.

அசுவவாரியர் acuva-v-āriyar
n. <id.+.
Riders of horseback, horsemen;
குதிரை செலுத்துவோர். (சிலப்.5.54,உரை.)

அசுவாமணக்கு acuvāmaṇakku
n.
Species of Aerua. See சிறுபூளை.
(மலை.)

அசுவாரசியம் acuvāraciyam
n. <asvārasya.
1. That which is disagreeable;
இனிமையற்றது.

2. Lack of taste, of predilection;
பிரியமில்லாமை. அவன் அக்காரியத்தில் அசுவாரசியமா யிருக்கிறான்.

அசுவினி acuviṉi
n. <ašvinī.
The first nakṣatra. See அச்சுவினி.
.

அசுவினிதேவர் acuviṉi-tēvar
n. <ašvin+.
Twin Vedic gods who are physicians of heaven, as twin horsemen;
தேவ மருத்துவர்.

அசுவு acuvu
n.
See அசுவுணி.
.

அசுவுணி acuvuṇi
n. cf. அசுகுணி.
A destructive insect;
செடிப்பூச்சிவகை. Loc.

அசுழம் acuḻam
n. cf. T. asura, 'dog'.
Dog;
நாய். கருதசுழ மாமிந்த மட்டை (திருப்பு. 132).

அசூயாபரன் acūyāparaṉ
n. <asūyā+ para.
Envious man, jealous person;
பொறமை கொண்டவன்.

அசூயை acūyai
n. <asūyā.
Envy, intolerance, jealousy;
பொறாமை. (மச்சபு.மன்வந்தர.22.)

அசேதனம் a-cētaṉam
n. <a-cētana.
That which is insensible, without consciousness;
அறிவில்லாதது. (சித்.சிகா.21,3.)

அசேஷம் a-cēṣam
n. <a-šeṣa.
All, everything, as without remainder;
எல்லாம். அசேஷகோத்திரத்து அசேஷசூத்திரத்தில் (S.I.I.i,84).

அசை 1 - தல் acai-
4 v.intr. [T.asiyādu.]
1. To move, stir;
இயங்குதல். அவனன்றி யோரணுவுமசையாது (தாயு.எங்கு.1)

2. To walk or ride slowly;
மெல்லச்செல்லுதல்.

3. To go away, depart;
விட்டுபோதல். அசைந்திடாதொழிகவென (ஞானவா.சிகித்.70).

4. To be slender, flexible;
நுடங்குதல். அசையியற்கு (குறள், 1098).

5. To be weary, exhausted, to grow feeble;
ஓய்தல். நடை மெலிந் தசைஇய நன்மென் சீறடி (சிறுபாண். 32).

6. To be perplexed, disconcerted;
கலங்குதல். மடங்கலின் றோற்ற நோக்கி யந்தக னசைந்து நின்றான். (கந்தபு.சிங்க.310).

7. To diminish;
குறைதல். அசையாது நிற்கும் பழி (ஆசாரக். 74).

8. To rest;
இளைப்பாறுதல். புன்மேய்த் தசைஇ (பு.வெ.1,11).

9. To lodge, stay;
தங்குதல். கல்லென் சீறூ ரெல்லியி னசைஇ (அகநா.63.)

10. To lie in a place;
கிடத்தல். குறங்கின்மிசை யசைஇய தொருகை (திரு முரு.109).

11. To be idle, inactive, indolent;
சோம்புதல். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணின் (குறள்,1040).

12. To dance;
கூத்தாடுதல். (பிங்).

அசை 2 - த்தல் acai-
11 v.tr. caus. of அசை1-
1. To shake, move, stir, agitate;
ஆட்டுதல். (காஞ்சிப்பு. மணிகண்.34.)

2. To join with;
சார்த்துதல். (தொல்.சொல்.250,சேனா.)

3. To tie, bind fasten;
கட்டுதல். புலித்தோலை யரைக்கசைத்து (தேவா.322,1).

4.(Mus.) To set to time;
தூக்குதல். (பு.வெ.7,18.)

5. To afflict, persecute;
வருத்துதல். நாய்நாவி னல்லெழி லசைஇ (சிறுபாண்.17).

6 To knock at;
தட்டுதல். கதவஞ்சேர்ந் தசைத்த கை (கலித்.68).

7.To say;
சொல்லுதல். சேட னாயிர நாவி னுலு மசைக்கினும் (குற்றா.தல.திருக்குற்றா.70).

 
34