Word

English & Tamil Meaning
பொருள்

அசை 3 acai
n. <அசை1-.
1. Expletive. See அசைச்சொல்.
.

2. Metrical syllable, of which there are two, viz., நேரசை(-), நிரையசை(==);
செய்யுளுறுப்புவகை. (இலக்.வி.711.).

3. Variety of duration of time-measure consisting of one mātra, corresponding to the mod. laku;
தாளத்தில் ஒரு மாத்திரைக்காலம். கொட்டுமசையும் (சிலப்.3,16,உரை).

4. cf. as. Cud;
மாடுகள் மீட்டுமெல்லு மிரை.

5. Sling for carrying or preserving ōla books;
சுவடித்தூக்கு.

6. Cumin. See சீரகம்.
(தைலவ. தைல.29.)

அசைகம்பு acai-kampu
n. <id.+.
Nine-foot painted rod with tinkling bells, used in Parava weddings;
பரவர் மணக்கோல்.

அசைகொம்பு acai-kompu
n. <id.+.
Movable horn fixed in the skin;
கட்டுக்கொம்பு. (W.)

அசைச்சீர் acai-c-cīr
n. <அசை3+.
Foot of one metrical syllable, usu. found at the end of a veṇpā;
ஓரசைச்சீர். அசைச்சீர்க்குதாரண நாண்மலரே (காரிகை,உறுப்.7).

அசைச்சொல் acai-c-col
n. <id.+.
Expletive particle as யா, கா, பிற;
சார்ந்து வரும் இடைச்சொல்.

அசைநிலை acai-nilai
n. <id.+.
See அசைச்சொல்.
(நன்.395.)

அசைநிலையளபெடை acai-nilai-y-aḷapeṭai
n. <id.+.
Lengthening of sound for the sake of metre;
அசைகோடற்பொருட்டுக் கொண்ட அளபெடை. (பி.வி.5,உரை.)

அசைப்பு acaippu
n. <அசை2-.
1. Speech;
சொல். (திவா.)

2. Arrogance;
இருமாப்பு. (J.)

அசைபோடு - தல் acai-pōṭu-
v.intr. <அசை3+.
To chew the cud
.

அசையடி acai-y-aṭi
n. <id.+ of
One of the component parts of kalippā;
அம்போதரங்கம். (இலக்.வி.738.)

அசையந்தாதி acai-y-antāti
n. <id.+.
Metrical composition in which the same syllable ends one line and begins the succeeding line of a stanza, as குன்றச் சாரற் குதித்தன கோண்மா, மாவென மதர்த்தன கொடிச்சி வான்கண்;
செய்யுளில் ஓரடியி னீற்றசை மற்றையடிக்கு முதலசையாக வருந் தொடை. (தொல்.பொ.411,உரை.)

அசையாப்பொருள் acaiyā-p-poruḷ
n. அசை1-+.
Immovable property;
தாவரம்.

அசையாமணி acaiyā-maṇi
n. <id.+.
Bell attached to the royal palace to apprise the sovereign of any calamity, as being seldom rung;
ஆராய்ச்சிமணி.

அசையிடு - தல் acai-y-iṭu-
v.intr. <அசை3+
To chew the cud;
அசைபோடுதல். (W.)

அசையியல் acai-y-iyal
n. <அசை1-+.
Slender woman;
நுடங்கிய இயல்புடைய பெண். அசையியற் குண்டாண்டோ ரேவர் (குறள்,1098).

அசையு acaiyu
n. cf. ašva-gandhā.
Species of Withania. See அமுக்கிரா
(மலை.)

அசையும்பொருள் acaiyum-poruḷ
n. <அசை1+.
Movable property;
ஜங்கமம்.

அசைவாடு - தல் acaivāṭu-
v.intr. <அசைவு+ஆடு-.
To hover over, move or stir, as wind on the surface of water;
மேலுலாவிச் செல்லுதல். (W.)

அசைவிடு - தல் acai-viṭu-
v.intr. <அசை3+.
1. To chew the cud;
அசைபோடுதல். அசைவிட் டுறங்குங் கன்று (கூர்மபு. கண்ணனவ.83).

2. To rest;
இளைப்பாறுதல். (பரிபா.6,2.)

அசைவு acaivu
n. <அசை1-.
1. Shaking, moving about, swinging;
சலனம். தூணமொத்தசைவற நின்றான் (காஞ்சிப்பு. சார்ந்தா.13).

2. Weariness, faintness, exhaustion;
தளர்வு. (சீவக. 1185.)

3 Laziness, sloth;
சோம்பு. ஆகூழாற் றோன்று மசை வின்மை (குறள்,371)

4. Suffering caused by loss of position;
முன்னிலைமை கெட்டு வருந்தும் வருத்தம். இளிவே யிழவே யசைவே (தொல்.பொ.253).

5. Defeat;
தோல்வி. அசைவில படையருள் புரிதருமவன் (தேவா 568,6).

அசைவுசெய் - தல் acaivu-cey-
v.tr.cf. as+.
To eat;
உண்ணுதல். நஞ்சினை யசைவு செய்தவன் (தேவா.581,3).

அசோகம் acōkam
n. <ašōka.
1. Freedom from sorrow;
துக்கமின்மை. (தஞ்சைவா.11.)

2. Asōka tree, m.tr., Saraca indica;
பிண்டி.(மலை.)

3. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
(L.)

4. Arjan. See மருது.
(மலை.)

அசோகமர்கடவுள் acōkamar-kaṭavuḷ
n. <id.+ அமர்-+.
Arhat, as the god under the Ašōka tree;
அருகன்.(பிங்.)

அசோகவனம் acōka-vaṉam
n. <id.+.
Ravana's pleasure garden;
இராவணனுடைய உத்தியானவனம். (இராமநா.சுந் 6.)

அசோகவனிகை acōka-vaṉikai
n. <id.+vanikā.
See அசோகவனம்.
.

அசோகவனிகாநியாயம் acōka-vaṉikā-niyāyam
n. <id.+id.+.
Maxim of the grove of Ašōka trees, used to denote that there may be several ways of doing a thing, one as good as another, Rāvana's preference for the groove, in which he kept Sītā, not being easy to account for;
ஓரிடத்து ஒன்றன் நிகழ்ச்சிக்குக் காரணங்காட்ட முடியாது நிற்கும் நெறி.

 
35