Word

English & Tamil Meaning
பொருள்

அசோகன் acōkaṉ
n. <id.
1. Arhat, to whom the Ašōka tree is sacred;
அருகன்.

2. Name of the Maurya emperor who issued the Edicts enjoining the principles and practice of Buddhism, 272-231 B.C.;
மௌரிய சக்கரவர்த்திகளுள் ஒருவன்.

அசோகாஷ்டமி acōkāṣṭami
n. <id.+aṣṭami.
Eighth tithi of the bright fortnight of Caittiram, as the day for drinking an infusion of three Ašōka buds with a view to drive away sorrow;
ஒரு விரதநாள்.

அசோகு acōku
n. <id.
1. Ašōka tree, m.tr., Saraca indica;
பிண்டி பூமலி யசோகின் புனைநிழல் (நன்.56).

2. Indian mast-tree. See நெட்டிலிங்கம்.
(L.)

அசோண்டி acōṇṭi
n.
Bitter snakegourd. See குறட்டை.
(மலை.)

அசோணம் acōṇam
n.
See அசோண்டி.
.

அசோதை acōtai
n. <Yašōdā.
Krṣṇa's foster mother;
கண்ணபிரானை வளர்த்ததாய். (திவ்.பெரியாழ்.1,2,1.)

அசௌக்கியம் a-caukkiyam
n. <a-saukhya.
Illness, sickness;
தேகசுகமின்மை.

அசௌகரியம் a-caukariyam
n. <a-saukarya.
1. Lack of opportunity;
சமயமில்லாமை.

2. Want of comfort, unhealthiness;
சுகமின்மை. Colloq.

அஞ்சப்படு - தல் aca-p-paṭu-
v.intr. <அஞ்சு-+.
To be respected, esteemed;
மதிக்கப்படுதல். அஞ்சலிசெய் தஞ்சப்படுவான் (சீவக.1610).

அஞ்சம் 1 acam
n. <hamsa.
1. Swan.
அன்னம். (திவா.)

2. Kind of asceticism. See ஹம்ஸம்.
குடீசகம் பகூதக மஞ்சம் (சூத.ஞான.2).

3. Hamsa mantra;
அஜபாமந்திரம். காயத்திரியதனினதிக மஞ்சமா மந்திரம் (காஞ்சிப்பு. திருவேக.28).

அஞ்சம் 2 acam
n. <amša.
Share, portion. See அம்சம்.
.

அஞ்சல் 1 acal
n. <அஞ்சு-.
1. Defeat;
தோல்வி. (பிங்.)

2. Laziness, sloth;
சோம்பு. (திவா).

அஞ்சல் 2 acal
n. [M.acal.]
1. Relay;
கடியில் மாற்றப்படுவது. ஓலைபிடித் தஞ்சலிலே யோடி (பணவிடு. 281).

2. Resting place on a journey;
கடி.

3. Letter post;
கடிதத் தபால்.

அஞ்சலப்பெட்டி acala-p-peṭṭi
n.
Dial. var. of அஞ்சறைப்பெட்டி.
.

அஞ்சலர் acalar
n. <அஞ்சு.+அல் neg.+ அர்.
Enemies;
பகைவர். அஞ்சலர் தனிப்போ ரேறே (நல்.பாரத.மார்க். 245).

அஞ்சலளி - த்தல் acal-aḷi-
v.intr. <id.+.
To give refuge, as saying, 'Fear not';
அபயங்கொடுத்தல்.(சங். அக.)

அஞ்சலி 1 acali
n. cf. anjali.
1. Bat;
வாவல். (பிங்.)

2. Species of Crataeva.See மாவிலிங்கம்.
(L.)

அஞ்சலி 2 acali
n. [M. aali.]
Anjali. See காட்டுப்பலா.
(M.M.)

அஞ்சலி 3 acali
n. <ajali.
1. Joining the hands and raising them, as in worship;
கைகூப்புகை. (பிங்.)

2. (Nāṭya.) Gesture with both hands in which they are joined in patākai pose;
இணைக்கைவகை. (சிலப்.3,18,உரை.)

3. Double handful of grain. See அரியெடுப்பு.
.

4. A measure of weight=4 palam;
நான்குபலம். கழலடி யஞ்சலியைந்து (தைலவ. தைல. 54).

5. Kind of arrow;
ஒருவகையம்பு.(கம்பரா.நாகபா.113.)

6. Worm killer. See வறட்சுண்டி.
(மூ.அ.)

அஞ்சலி 4 - த்தல் acali-
11 v.tr. <id.
To worship with folded hands, reverence;
கைகூப்பித் தொழுதல். அஞ்சலித் தடிமேற் சூடி (நல்.பாரத.மார்க்.245).

அஞ்சலி 5 acali
n.
Species of Azima. See சங்கங்குப்பி.
(W.)

அஞ்சலிக்கை acali-k-kai
n. <ajali+.
See அஞ்சலி3, 2.
(பரத.பாவ.47).

அஞ்சலிபத்தன் acali-pattaṉ
n. <id.+ baddha.
One whose hands are joined in worship;
கூப்பிய கையினன்.

அஞ்சலிபந்தனம் acali-pantaṉam
n. <id.+.
Salutation with folded hands raised, as to the forehead;
கைகூப்பித் தொழுகை.

அஞ்சலினவர் acaliṉavar
n. <அஞ்சு+அல், 'night'+ அவர்.
Vaiṣṇavas of the Pācarātra sect;
பாஞ்சராத்திரிகள். அஞ்சலினவர் புகழண்ணல் (கந்தபு. திருவவ.62).

அஞ்சற்காரன் acaṟ-kāraṉ
n. [M. acalkkāran.]
Post-courier, post-runner;
தபால் கொண்டுபோகிறவன்.

அஞ்சற்குளச்சி acaṟ-kuḷacci
n.
A prepared arsenic;
வைப்புப்பாஷாணவகை. (மூ.அ.)

அஞ்சறைப்பெட்டி acaṟai-p-peṭṭi
n. <அஞ்சு1+அறை+.
Spice box with five compartments, one in the middle and four surrounding;
கடுகு மிளகு முதலியன வைக்கும் ஐந்தறையுள்ள பேழை.

அஞ்சன் acaṉ
n. <hamsa.
1. Kind of ascetic. See ஹம்ஸன்.
சீரஞ்சன் கமண்டலம் (சூத.ஞான.6.7).

2. Brahmā;
பிரமன். (சூத.எக்கிய.உத். பிரம.2,15.)

3. A deity representing the sun, one of the tuvātacātittar, q.v.;
துவாதசாதித்திருளொருவன். (கூர்மபு.ஆதவர்சிறப்.2.)

 
36