Word

English & Tamil Meaning
பொருள்

அஞ்சனக்கல் acaṉa-k-kal
n. <ajana+.
Sulphuret of antimony, black bismuth, used as a collyrium, as a combustible in fire works;
கருநிமிளை.(மூ.அ.)

அஞ்சனக்கலிக்கம் acaṉa-k-kalikkam
n.<id.+.
Magic black pigment rubbed on the eyes or palms of one who wishes to discover anything lost;
மறைபொருளைக் காட்டும் மந்திர மை. (W.)

அஞ்சனக்காரன் acaṉa-k-kāraṉ
n. <id.+.
Conjurer, sorcerer who uses the magic black pigment;
மந்திர மை யிடுவோன். அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினான்.

அஞ்சனக்கோல் acaṉa-k-kōl
n. <id.+.
Pencil to paint the eyelashes with collyrium;
கண்ணுக்கு மைதீட்டுங் கோல். அஞ்சனக் கோலி னாற்ற நாகம் (சீவக. 1894).

அஞ்சனப்பெட்டி acaṉa-p-peṭṭi
n. <vyajana+.
See அஞ்சறைப்பெட்டி.
.

அஞ்சனபாஷாணம் acaṉa-pāṣāṇam
n.<id.+.
A mineral poison;
பிறவிப் பாஷாண வகை. (மூ.அ.)

அஞ்சனம் acaṉam
n. <ajana.
1.Collyrium, black pigment for the eyelashes;
கண்ணிடு மை. வேற்க ணஞ்சனத்தின் நீறணிந்து (திவ்.சி.மடல். 10).

2. Magic black pigment, of which there are three, viz., பூதாஞ்சனம், பாதாளாஞ்சனம் சோராஞ்சனம்;
மறைபொருளைக் காட்டும் மை. அஞ்சனங்கள் போட்டும் (பணவிடு.15).

3. Magic art. See அஞ்சனவித்தை.
புகரிலா வதிரிச்சிய மஞ்சனம் (திருவிளை.எல்லாம்.17).

4. Medicine for the eyes of a person bitten by a venomous snake, or of one who has fits; 5. Blackness;
கலிக்கம். (W.); கருநிறம். (பிங்.)

6. Darkness;
இருள்: (W.)

7. Dark coloured stone;
நீலக்கல். (அக.நி.)

8. Stain, spot, fault;
குற்றம். அஞ்சன நிரஞ்சனமும் (தாயு.ஆனந்த.5).

9. Sin;
பாவம். திளைப்ப ரஞ்சனமு மற்றே (சிவதரு. சிவஞானயோ.99).

10. Male elephant of the West, one of aṣṭa-tik-kajam, q.v.;
மேற்றிசை யானை. (சூடா.)

11. A tree;
மரவகை. சூர லஞ்சன மந்தரை (மச்சபு.அத்திரி. 5).

அஞ்சனம்பார் - த்தல் acaṉam-pār-
v.intr. <id.+.
To discover hidden things with the help of magic black pigment;
மறைந்த பொருளை அஞ்சனமிட் டறிதல். (பரத.பாவ.20.)

அஞ்சனவண்ணன் acaṉa-vaṇṇaṉ
n. <id.+ varṇa.
Viṣṇu, as dark-complexioned;
திருமால். (சிலப்.6,47.)

அஞ்சனவித்தை acaṉa-vittai
n. <id.+.
Art of discovering with the help of magic black pigment, lost, stolen or concealed property;
மறை பொருளை மையிட்டுக் காணும்வித்தை. (சௌந்த.30,உரை.)

அஞ்சனவெற்பு acaṉa-veṟpu
n. <id.+.
The Tirupati hills;
திருவேங்கட மலை. (திவ்.திருவாய்.8,2,8.)

அஞ்சனா acaṉā
n. <U. ancenā.
Estimate or appraisement of the probable amount and value of the crops standing on a field;
சாகுபடி மதிப்பு. (C.G.)

அஞ்சனாட்சி acaṉāṭci
n. <ajana+akṣi.
Woman having her eyelashes painted with collyrium;
மைதீட்டிய கண்ணுடையாள்.

அஞ்சனாதார் acaṉā-tār
n. <U. ancenā-dār.
Estimator, appraiser;
சாகுபடி மதிப்பிடுபவன். (C.G.)

அஞ்சனாவதி acaṉāvati
n. <ajanāvati.
Name of the female elephant of the North-East, mate of cuppiratikam;
வடகீழ்த்திசைப் பெண் யானை. (W.)

அஞ்சனி acaṉi
n. <ajana.
1. Iron-wood tree. See காயா.
(பிங்.)

2. Kans. See நாணல்.
(W.)

அஞ்சனை acaṉai
n. <ajanā.
1. Name of the mother of Hanumān;
அனுமாருடைய தாய். (கம்பரா.நட்புக்.28.)

2. Name of the female elephant of the North, mate of cārvapaumam;
வடதிசைப் பெண் யானை. (W.)

அஞ்சனைஜாபிதா acaṉai-jāpitā
n. <U.ancenā+.
List or account of an estimate of the probable out-turn of standing crops;
புள்ளிக்கணக்கு. (C.G.)

அஞ்சாப்பட்டயம் acā-p-paṭṭayam
n. <அஞ்சு-+ஆ neg.+.
1. Certificate from the king, formerly inscribed on metal, clearing a man from a charge of guilt and re-establishing his rights as a citizen;
எடுத்த உரிமைகளைத் திரும்ப அளித்தற்குரிய சாசனம். (J.)

2. Writ of authority, security against oppression and ill-treatment;
பிறர்கொடுமை செய்யாவகை நியமிக்கும் சாசனம். (J.)

3. Passport;
அபயநிருபம். (J.)

அஞ்சாரப்பெட்டி acāra-p-peṭṭi
n.
Dial. var. of அஞ்சறைப்பெட்டி.
.

அஞ்சாலியிடையர் acāli-y-iṭaiyar
n. <ஐந்தாலி+.
A division of the herdsman caste, whose women wear tāli with five jewels;
இடைச் சாதிப் பிரிவார். (W.)

அஞ்சி 1 aci
n.
A munificent chief of the Saṅgham age;
அதியமான். (புறநா. 91.)

 
37