Word

English & Tamil Meaning
பொருள்

அக்காக்குருவி akkā-k-kuruvi
n. <அக்கா +.
Koel, Eudynamis honorata, as going about crying akkā;
குருவி வகை.

அக்காத்தான் akkāttāṉ
n.
Belleric myrobalan. See தான்றி.
(மலை.)

அக்காத்தி akkātti
n. <a-gati.
One without resources or friends;
திக்கற்றவன். அவன் அக்காத்தியாய்த் திரிகிறான். Loc.

அக்காத்தை akkāttai
n. <அக்கா + ஆத்தை.
Elder sister;
அக்காள். Loc.

அக்காதேவி akkā-tēvi
n. <id. +.
Goddess of evil, as elder sister of Lakṣmī;
மூதேவி. (சங்.அக.)

அக்காரடலை akkāraṭalai
n. <அக்காரம்1 + அடு2-
Rice boiled with sugar;
சர்க்கரை சேர்த்துச் சமைத்த சோறு. (சீவக. 928)

அக்காரம் 1 akkāram
n. cf. a-kṣāra, sarkarā.
1. Sugar;
சர்க்கரை.அக்கார மன்னார் (நாலடி 374)

2. Sugar-cane;
கரும்பு. (மூ.அ.)

அக்காரம் 2 akkāram
n. <sahakāra.
Mango tree. See. மாமரம்.
மாமரம். (மூ.அ.)

அக்காரம் 3 akkāram
n.
Cloth, clothes;
ஆடை (பிங்.)

அக்காரவடிசில் akkāra-v-aṭicil
n. <அக்காரம்1+.
Rice boiled in milk and ghee with sugar;
சர்க்கரைப் பொங்கல் வகை. அக்கார வடிசில் சொன்னேன் (திவ்.நாய்ச்.9.6)

அக்காரை akkārai
n. <id.
Kind of sweet cake;
சிற்றுண்டி வகை. (சீவக.928.உரை.)

அக்காள் akkāḷ
n. <அக்கா.
Elder sister;
தமக்கை. Colloq.

அக்காளன் akkāḷaṉ
n.
Species of wild grass;
வனப்புல். (மலை.)

அக்கி 1 akki
n. <akṣi,
Eye;
கண். (சூடா.)

அக்கி 2 akki
n. <Pkt. aggi<agni.
1. Fire;
தீ. அக்கிவாய் மடுத்த வேடு (திருவிளை.சமண.38).

2. God of fire;
அக்கினிதேவன். அக்கியுங் கரமிழந்து (சிவதரு.சனன.51)

3. Heat;
உஷ்ணம். (W.)

4. Herpes;
நோய் வகை.

அக்கிக்கல் akki-k-kal
n. <akṣi+.
Cornelian, a kind of chalcedony;
ஸ்படிக வகை. (M.M.)

அக்கிசசூர் akki-ca-cūr
n. <id.+.
Disease of the eye;
கண்ணோய். (தைலவ.தைல.8)

அக்கிநோய் akki-nōy
n.
See அக்கிசசூர்.
(தைலவ.தைல.35)

அக்கிபடலம் akki-paṭalam
n. <akṣi+.
Disease of the cornea of the eye;
கண்ணோய் வகை. (W.)

அக்கியம் akkiyam
n. (Astrol.)
The 14th of 15 divisions of day;
பகல் 15 முகூர்த்தத்துள் பதினான்காவது. (விதான.குணா.73,உரை.)

அக்கியாதம் akkiyātam
n. <a-jātā.
Living incognito;
அறியப்படாமல் வசிக்கை. ஓதுமொருவருட மக்கியாத மெனவும் (நல்.பாரத.சிறப்பு.35)

அக்கியானம் akkiyāṉam
n. <a-jāna.
Ignorance, spiritual ignorance. See அஞ்ஞானம்.
Vul.

அக்கியானி akkiyāṉi
n. <a-jānin.
Heathen. See. அஞ்ஞானி.
Chr.

அக்கியெழுது - தல் akki-y-eḻutu-
v.intr. <Pkt.aggi+.
To paint a lion or dog with red ochre on the herpes sore, as a cure;
அக்கிப்புண் தீரச்செங்காவிக் குழம்பாற் சிங்க நாயுருக்க ளெழுதுதல்.

அக்கிரகண்ணியன் akkira-kaṇṇiyaṉ
n. <agra+.
One who is considered foremost, highest in rank;
முதல்வனாக மதிக்கப்படுபவன். மகாவீரர்க்கெல்லாம் அக்கிரகண்ணியன் (சி.சி.பாயி சிவாக்.)

அக்கிரகாரம் akkirakāram
n. <agrahāra.
1. Brāhman village or street;
பார்ப்பனச்சேரி, வீதி.

2. Village formerly allotted to Brāhmans at a favourable assessment or rent free;
முற்காலத்தில் பிராமணர்க்குக் கொடுக்கப்பட்ட மானியம். (M.M.)

அக்கிரசந்தானி akkira-cantāṉi
n. <agra+samdhāni.
Register of good and bad actions of all beings, maintained by Yama;
ஜீவர்களுடைய நன்மை தீமைக ளெழுதப்படும் யமனுடைய குறிப்பேடு.

அக்கிரசம்பாவனை akkira-campāvaṉai
n. <id.+.
Priority of attention, because of rank, priority in presentation of gifts, as a mark of honour;
முதல் வெகுமானம்.

அக்கிரசன் akkiracaṉ
n. <agra-ja.
Elder brother, as first-born;
தமையன்.

அக்கிரசாலை akkira-cālai
n. <id.+.
Feeding-house for Brāhmans;
அந்தணரை யுண்பிக்கும் சாலை. (Insc.)

அக்கிரசாலைப்புறம் akkira-cālai-p-puṟam
n. <id.+.
Endowment in the shape of land to provide a feeding-house for Brāhmans;
அந்தணரை யுண்பிக்கும் சாலைக்கு விடப்பட்ட மானியம். (Insc.)

அக்கிரணி akkiraṇi
n. <agra-ṇi.
Leader, foremost person;
முதல்வன். (சம்.அக.)

அக்கிரதாம்பூலம் akkira-tāmpūlam
n. <agra+.
Priority in presentation of pān-supāri, as a mark of honour;
முதற் கொடுக்கும் தாம்பூல மரியாதை.

 
4