Word

English & Tamil Meaning
பொருள்

அக்கிரபூசை akkira-pūcai
n. <id.+.
First act of reverence;
முதன் மரியாதை.

அக்கிரம் akkiram
n. <agra.
1. Tip;
நுனி. தருப்பை கைக்கொண் டக்கிரங் கிழக்கதாக (இரகு.கடி.79)

2. That which is foremost, first;
சிரேட்டம்.

3.Amplitude of a celestial object;
கிரகம் கிழ்மேல்வீதி அகறல். (W.)

4. Four mouthfuls of food given as alms;
நாலு கவளப் பிச்சை. (கூர்மபு.நித்திய கன்.17)

அக்கிரமம் a-k-kiramam
n. <a-krama.
1. Irregularity;
ஒழுங்கின்மை.

2. Injustice;
அநீதம்.

அக்கிரமி akkirami
n. <a-kramin.
Unjust person;
நீதி தவறியவன். Colloq.

அக்கிராகியம் a-k-kirākiyam
n. <a-grāhya.
1. That which is inadmissible;
கொள்ளத்தகாதது.

2. That which cannot be perceived;
புலனாகாதது. அக்கிராகியமான தேஜோரூபமாம் (சி.சி.பாயி.சிவாக்.)

அக்கிராசனம் akkirācaṉam
n. <agra+āsana.
Seat of honour, the chair at a meeting;
சபைத்தலைமை.

அக்கிராசனர் akkirācaṉar
n. <id.+.
Chairman, president;
சபைத்தலைவர்.

அக்கிராசனாதிபதி akkirācaṉātipati
n. <id.+id.+ adhipati.
See அக்கிராசனர்.
.

அக்கிராரம் akkirāram
n. <agra-hāra.
Brāhman street. See அக்கிரகாரம்.
அக்கிராரச் சேஷியுமோ வப்படியே (தனிப்பா.) Vul.

அக்கிரேசரன் akkirē-caraṉ
n. <agrē-sara.
Leader;
தலைவன்.

அக்கிலிப்பிக்கிலி akkili-p-pikkili
n. edupl. of T. akkili.
1. Confusion;
குழப்பம்

2. Confusion of mind;
மனக்குழப்பம். Loc.

அக்கிலு akkilu
n.
Tribulus plant. See நெருஞ்சி.
(மூ.அ.)

அக்கினி akkiṉi
n. <agni,
1. Fire;
தீ.

2. Agni, the god of fire, regent of the South East, one of aṣṭa-tikku-p-pālakar, q.v.;
அக்கினி தேவன். (பிங்.)

3. Sacrificial fire;
யாகத்தீ.

4. Digestive fire. See சாடராக்கினி.
.

5. Rosy-flowered leadwort. See செங்கொடிவேலி.
(மலை.)

6.(Astrol.) The 11th of 15 divisions of day and the 7th of those of night;
பகல் 15 முகூர்த்தத்துள் பதினொராவதும் இரவு 15 முகூர்த்தத்துள் ஏழாவுதும். (விதான.குணா.73,உரை.)

7. Saltpetre;
வெடியுப்பு. (மூ.அ.)

8. Ammonium chloride. See நவச்சாரம்.
(மூ.அ.)

9. Tribulus plant. See நெருஞ்சி.
(மலை.)

அக்கினிக்கட்டு akkiṉi-k-kaṭṭu
n. <id.+.
Art of suspending the action of fire by magic;
அக்கினித் தம்பனம். காடுகட் டக்கினிக்கட்டு காட்டித் தருவேன். (குற்றா.குற.116,1)

அக்கினிக்கரப்பான் akkiṉi-k-karappāṉ
n. <id.+.
Severe type of herpes;
நோய் வகை. (W.)

அக்கினிகாரியம் akkiṉi-kāriyam
n. <id.+.
Religious rites performed in the consecrated fire;
அக்கினியிற் செய்யப்படும் ஓம முதலியன.

அக்கினிகுண்டம் akkiṉi-kuṇṭam
n. <id.+.
Enclosed pit for consecrated fire;
ஓமாக்கினி வளர்க்குங் குழி.

அக்கினிகுமாரம் akkiṉi-kumāram
n. <id.+.
A compound medicine;
ஒரு கூட்டுமருந்து. (பதார்த்த.1211.)

அக்கினிகுமாரன் akkiṉi-kumāraṉ
n. <id.+.
Skanda, as offspring of Agni;
முருகக்கடவுள்.

அக்கினிகுலம் akkiṉi-kulam
n. <id.+.
Agni race of kings, as descended from Agni, one of three. irāca-kulam, q.v.;
இராசக்குலத்தொன்று.

அக்கினிகோணம் akkiṉi-kōṇam
n. <id.+.
The SE. quarter, as under the guardianship of Agni;
அக்கினிமூலை.

அக்கினிகோத்திரம் akkiṉi-kōttiram
n. <agni+hōtra.
Sacrifice to Agni and certain other deities performed daily, morning and evening;
தினந்தோறுஞ் செய்யும் ஓம விசேஷம். (திருக்காளத்.பு.26,6.)

அக்கினிகோத்திரி akkiṉi-kōttiri
n. <agni+hōtrin.
One who habitually performs agni-hōtra;
அக்கினிகோத்திரஞ் செய்வோன்.

அக்கினிச்சலம் akkiṉi-c-calam
n.
A medicinal root. See கார்த்திகைக்கிழங்கு.
(மலை.)

அக்கினிச்சிவம் akkiṉi-c-civam
n. cf. agni+sikhā.
Indian acalypha. See குப்பைமேனி.
(மலை.)

அக்கினிச்சுவத்தர் akkiṉi-c-cuvattar
n. <agni-svātta.
Manes of gods who, when living on earth, maintained the sacred domestic fires, but did not perform the agniṣṭōma or other sacrifices;
தேவ பிதிரருள் ஒரு சாரார். அக்கினிச் சுவத்தரெனும் தேவர் பிதிர்க்களும் (கூர்மபு. பிருகு.13)

அக்கினிச்சுவாலை akkiṉi-c-cuvālai
n. agni+.
Flame of fire;
தீக்கொழுந்து.

அக்கினிச்சேர்வை akkiṉi-c-cērvai
<id.+.
Blister plaster;
காரச்சீலை. (J.)

அக்கினிசகன் akkiṉi-cakaṉ
n. <id.+.
Wind, as the friend of fire;
காற்று.

அக்கினிசகாயன் akkiṉi-cakāyaṉ
n. <id.+.
See. அக்கினிசகன்.
.

 
5