1.7 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை பெரியபுராணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • பெரியபுராணக் காப்பியம் பற்றிய பொதுச் செய்திகளை அறிந்திருப்பீர்கள்.
     

  • இக்காப்பியத்தின் ஆசிரியரான சேக்கிழாரின் வரலாறு பற்றியும், பெரியபுராணம் இயற்றப்படுவதற்குரிய காரணங்கள் பற்றியும், நூல் அரங்கேற்றம் பற்றியும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
     

  • பெரியபுராண அடியார்களின் காலம் பற்றியும் சேக்கிழார் காலம் பற்றியும் அறிந்திருப்பீர்கள்.
     

  • பெரியபுராணத்தின் மூல நூல்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்திருப்பீர்கள்.
     

  • பெரியபுராணக் காப்பியக் கொள்கை, காப்பிய அமைப்பு, அடியார் சிலரின் வரலாறு ஆகியவற்றை அறிந்திருப்பீர்கள்.
     

  • பெரியபுராணம் தமிழ் இலக்கிய உலகிற்கும், சமுதாயத்திற்கும், சமயத்திற்கும் ஆற்றிய பங்களிப்பைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் II

1.

காப்பிய இலக்கணங்களில் மூன்றினைச் சுட்டுக.

விடை

2.

பெரியபுராணம் எத்தனைச் சருக்கங்களை உடையது?

விடை

3.

தொகை அடியார் இருவர் பெயரைத் தருக. விடை

4.

சிறுத்தொண்டரின் சிறப்பு யாது?

விடை

5.

கண்ணப்ப நாயனாரின் சிறப்பு யாது?

விடை

6.

சிவன் அடியார்கள் சாதி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவர் - சரியா?

விடை