3.4. தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றிக் காப்பிய அறிமுக நிலையில் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாழ்க்கை வரலாற்றை முழுவதும் அறிந்திருப்பீர்கள். கம்பர் பற்றி வழங்கும் கதைகள் மற்றும் அவர் இயற்றிய நூல்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

  • கம்பர் வாழ்ந்த காலத்தை அறிந்திருப்பீர்கள்.

  • தென்னிந்திய மொழிகளில் இராமாயணம் இயற்றப்பட்ட வரலாற்றை அறிந்திருப்பீர்கள்.

  • பண்டைய தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பற்றிய நிகழ்ச்சிகள் எவ்வாறு பதிவாகி உள்ளன என்பதைத் தெரிந்திருப்பீர்கள்.

  • கம்பராமாயணக் காப்பிய அமைப்பும் ஒவ்வொரு காண்டத்தில் உள்ள கதை அமைப்பும் பற்றி அறிந்திருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

கம்பராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது?

விடை

2.

கம்பராமாயணக் காண்டங்கள் இரண்டின் பெயரினைச் சுட்டுக.

விடை

3.

கம்பராமாயணப் படலங்களின் எண்ணிக்கையைத் தருக.

விடை

4.

சுந்தர காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக.

விடை