தன் மதிப்பீடு : விடைகள் - II |
|
4. சுந்தர
காண்டத்தின் பெயர்ப் பொருத்தத்தை விளக்குக. |
|
1) | <ஏனைய காண்டங்களின் கதையை விடச் சுந்தர காண்டத்தின் கதை சுவை (அழகு) மிக்கதாய் உள்ளது. |
2) | அனுமனின் பெருமையை விளக்கும் அழகிய பாடல்களைக் கொண்டது. |
3) | <அனுமனுக்குச் சுந்தரன் என்ற பெயர் உண்டு. அனுமன் பற்றிய நிகழ்ச்சிகளையே பெரிதும் விவரிப்பதால் இக்காண்டம் சுந்தர காண்டம் என அவன் பெயராலேயே அழைக்கப்பட்டிருக்க வேண்டும். |
4) | இராமன், சீதை இருவருடைய அழகு இக்காண்டத்தில் இனிதாகக் கூறப்பட்டுள்ளது. |
5) | இராமன் சீதை இருவரின் பிரிவு நிலையில் நுகரப் பெறும் துன்பச் சுவை இக்காண்டத்தில் கவிதை அழகுடன் பாடப்பட்டுள்ளது. இவ்வாறாகச் சுந்தர காண்டத்தின் பெயர்க் காரணங்கள் விளக்கப்பட்டுள்ளன. |