தன் மதிப்பீடு :
விடைகள் - II |
|
2) |
தமிழிசையின்
தொன்மையை விவரிக்க. |
தமிழிசை
மிகவும் தொன்மையாது. தமிழர்தம்
இசைக்
கருவிகள் யாழும் குழலும் ஆகும்.
பாணனும் பாடினியும்
தமிழிசை வல்லுநர்கள்.
அவர்கள் பாடி மகிழ்வித்த
பண்ணும் தமிழ்ப்பண். தமிழ்
ஐந்திணைகளாகிய குறிஞ்சி,
பாலை, முல்லை, மருதம்,
நெய்தல் என்பனவற்றிற்குப்
பண்ணும்
யாழும்
இருந்தன. பண்டைக்கால
இசைத்தமிழுக்குச் சான்றாகச்
சிலப்பதிகாரத்தில் உள்ள
கானல்வரி, ஆய்ச்சியர் குரவை,
வேட்டுவவரி ஆகியவை
விளங்குகின்றன. மேலும் தேவார,
திருவாசகப் பாடல்களும்
நாலாயிரத் திவ்வியப்
பிரபந்தங்களும் தமிழிசையின்
தொன்மைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. |