4.5 தொகுப்புரை |
கவிஞர் முடியரசனின் பூங்கொடிக் காப்பியம் ‘மொழிக்கொரு காப்பியமாக’ அமைந்துள்ளது. தமிழ்மொழி, இசைத்துறையிலும், வழிபாட்டு நிலையிலும் ஆட்சித் துறையிலும் புறக்கணிக்கப்பட்டது. தாய்மொழி என்ற நிலையிலும் தமிழுக்குரிய இடம் மறுக்கப்பட்டது. இந்நிலைமைகளை மாற்றி இசைத்துறையிலும், வழிபாட்டு நிலையிலும் ஆட்சித் துறையிலும் தமிழை நிலைநிறுத்திப் பூங்கொடி மொழிப்போராட்டம் நடத்தினாள். அப்போராட்ட முடிவில் தன் உயிரையே தியாகம் செய்தாள். |
பூங்கொடி என்ற இளமங்கையின் வாழ்க்கை உருவாக்கத்திற்குக் காரணமானவர்கள் சுட்டிக்காட்டப்பட்டனர்; நிகழ்ச்சிகள் சுட்டிக் காட்டப்பட்டன. |
பூங்கொடி என்னும் காப்பியத்தலைவி ஓர் இலட்சியமாகத் திகழ்கிறாள். மாசுமறுவற்ற ஒரு பாத்திரமாகக் கவிஞர் முடியரசன் அவர்கள் பூங்கொடி பாத்திரத்தைப் படைத்துள்ளார் எனலாம். |
1. |
கடவுளர்களுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பிற்கு இரு சான்றுகள் தருக. |
விடை |
2. |
தமிழிசையின் தொன்மையை விவரிக்க. |
விடை |
3. |
தமிழ்மொழிக் காப்புப் பணிகளில் இரண்டினைக் குறிப்பிடுக. |
விடை |
4. |
மொழிக் கலப்புப் பற்றிய முடியரசன் கருத்து யாது? |
விடை |
5. |
மொழிப் போராட்டத்தின் தேவை குறித்துப் பூங்கொடி கூறுவன யாவை? |
விடை |