தன் மதிப்பீடு :
விடைகள் - II |
|
5) |
மொழிப்போராட்டத்தின் தேவை
குறித்துப்
பூங்கொடி
கூறுவன யாவை? |
தாய்மொழி வளர்ச்சி போதிய அளவு இல்லாதபோது, நாட்டில் போதிய கல்வியறிவு இல்லாதபோது பிறமொழியைப் பயில்வது நன்மை தராது. இத்தகைய சூழலில் மொழிப்போராட்டம் தேவையாயிற்று. தமிழ்
தமிழர்களின் தாய்மொழியாக
இருந்தும் தமிழக
ஆட்சியில்
தமிழுக்கு இடம்
வழங்கப்படவில்லை.
ஆட்சியியலில்
வேற்றுமொழி
ஆட்சி செய்தது.
ஆள்வோருக்கு ஆட்சி மொழியாகத்
தமிழ் ஆக்கப்படல்
வேண்டும் என வற்புறுத்திக்
கூறப்பட்டது. ஆட்சியாளர்
அதற்குத் தக்க நடவடிக்கை
எடுக்கவில்லை. இச் சூழலில்
மொழிப்போராட்டம் தேவையாயிற்று
என்பதைப் பூங்கொடி
உணர்த்தினாள். |