4.6 தொகுப்புரை

இந்தப் பாடத்தில் படர்க்கை வினைமுற்றுகள் ஐந்து வகையான பால் பாகுபாட்டிற்கேற்ப விகுதிகளைப் பெற்று வருவதைப் பார்த்தோம். தெரிநிலை வினைமுற்று, குறிப்பு வினைமுற்று ஆகியவற்றில் பெரும்பாலும் ஒரே வகை விகுதிகளே பயன்படுகின்றன என்பதையும் தெரிந்து கொண்டோம். ‘ஆ’ என்பது மட்டும் எதிர்மறைப் பொருள் தரும் வினைமுற்று விகுதியாக வருவதையும் பார்த்தோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

பலர்பால் வினைமுற்று விகுதிகள் யாவை?

விடை

2.

படர்க்கை ஒன்றன்பால் வினைமுற்று விகுதியைப் பயன்படுத்தி இரண்டு தொடர்களை எழுதுக.

விடை

3.

பலவின்பால் வினைமுற்று விகுதிகளாக நீவிர் அறிவன யாவை?

விடை

4.

‘ஆ’ எனும் பலவின்பால் வினைமுற்று விகுதி எப்பொருளில் வரும்?

விடை

5.

படர்க்கை வினைமுற்று விகுதிகள் அனைத்தையும் தொகுத்து எழுதுக.

விடை