2.5 தொகுப்புரை
வேற்றுமை உருபுகள்
பெயரைச் சார்ந்து நின்று பொருளை
வேறுபடுத்திக் காட்டுகின்றன. வினைச்சொல்லில் இறுதியில்
நிற்கும் விகுதிகளும் இடையில் நிற்கும் காலம் காட்டும்
இடைநிலைகளும் பொருள் தெளிவினைத் தந்து நிற்கின்றன.
சொல்லைச் சார்ந்து இயைந்து வரும் சாரியைகளும் ஒப்புமைப் பொருளை உணர்த்தும் உவம உருபுகளும்
செய்யுள் வழக்கிலும் உலகியல் வழக்கிலும் இடைச்சொற்களாக சிறந்து விளங்குகின்றன. இவற்றை
இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது. |
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
|
||
1)
|
சாரியை என்றால் என்ன? | [விடை] |
2)
|
சாரியைகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை? | [விடை] |
3)
|
பலவற்றை என்பதில் இடம்பெற்றுள்ள சாரியை
எது?
|
[விடை] |
4)
|
உயிர் மெய் நெடில்கள் சாரியை பெறுமா? | [விடை] |
5)
|
'முத்துப் போன்ற பல்' - இதில் இடைச்சொல் எது? | [விடை] |
6) | உவம உருபுகள் எத்தனை? | [விடை] |