3.6 தொகுப்புரை

இடைச்சொல் வகைகள் பகுதி இரண்டில், நான்கு வகை இடைச்சொற்களின் விளக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஏகாரம் ஓகாரம் முதலிய இடைச்சொற்கள் இலக்கியங்களிலும் வழக்குகளிலும் எவ்வெப் பொருள்களில் பயின்று வந்துள்ளன என்பது விரிவாக எடுத்துரைக்கப் பட்டிருக்கிறது. ஒலிக்குறிப்புச் சொற்கள் சில இன்று புதிதாக வழக்கில் வந்துள்ளன. இவற்றையெல்லாம் இந்தப் பாடம் விளக்கியிருக்கிறது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1)

அந்தில் அசைநிலையாக வரும் எடுத்துக்காட்டைச் சுட்டுக.

[விடை]
2)
அது மற்றம்ம - என்பதில் அம்ம இடைச்சொல் எந்தப் பொருளில் வந்துள்ளது?
[விடை]
3)

மா என்னும் இடைச்சொல் எவ்விடத்து வரும்?

[விடை]
4)

முன்னிலை இடத்து வரும் அசைச்சொற்கள் நான்கினைக் கூறுக.

[விடை]
5)

ஒலிக்குறிப்புச் சொல் என்றால் என்ன?

[விடை]
6)
திடீரென மறைந்து விட்டான் - இதில் வரும் குறிப்புச் சொல் என்ன பொருளைத் தருகின்றது?
[விடை]