4.7 தொகுப்புரை
பொதுமக்கள் உள்ளத்தைத் தம் பதிகங்களாலும்,
பாசுரங்களாலும்,
நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஈர்த்துப் பழைய சமயத்திற்குத்
திருப்பினர். இம்முயற்சிக்குப் பல்லவ மன்னர்களது
ஆதரவும்,
மக்களது ஆதரவும் கிடைத்தன. அறக்கருத்துகளை நேரடியாகச்
சொல்ல முனையாது கதைகளுடே பொதிந்து தரும்
வண்ணம்
கதைசார் நூல்களை ஆக்குதல் மூலம் சமண, பௌத்தப் புலமை
வல்லார் முயன்றனர். எல்லா வகை
நூல்களும் தமிழுக்குக்
கொடையாகவே அமைந்தன.
|