தன் மதிப்பீடு : விடைகள்
- II
|
1. கலம்பகம் என்றால் என்ன? தமிழில் அமைந்த முதல் கலம்பக நூலையும், அதன் பாட்டுடைத் தலைவனையும் பற்றிக் கூறுக.
|
பலவகை உறுப்புகளும், பலவகைப் பொருளும் அமையும் வண்ணம் பலவகைச் செய்யுள்களால் கலந்து பாடப்படுவது கலம்பகம் ஆகும். தமிழில் அமைந்த முதல் கலம்பக நூல், ‘நந்திக் கலம்பகம்’ ஆகும். இதைப் பாடியவர் யாரென்று தெரியவில்லை. பாட்டுடைத் தலைவன், மூன்றாம் நந்திவர்மன் என்பர்.
|