3.4 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை சோழர் காலத் தமிழில் எழுத்தியல் குறித்த பல செய்திகளைப் படித்தீர்கள்! இந்தப் பாடத்தின் மூலமாக என்னென்ன செய்திகளைப் புரிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

சோழர் காலத் தமிழை அறிய உதவும் இலக்கிய, இலக்கணங்கள், பிற ஆதாரங்களான கல்வெட்டுகள், செப்பேடுகள், சாசனங்கள், ஆவணங்கள் போன்ற செய்திகளை அறிந்து கொண்டீர்கள்.
அந்தக் காலக் கட்டத்தில் தமிழ் மொழியில் ஏற்பட்ட பல்வேறு உயிரெழுத்துகளின் மாற்றங்களையும், ஒலிப்பு முறைகளில் ஏற்பட்ட வேறுபாட்டினையும் புரிந்து கொள்ள முடிந்தது.
சோழர் காலத்தில் உயிரெழுத்துகள் மட்டுமன்றி மெய்யெழுத்துகளும் எத்தகைய மாற்றங்களுக்கெல்லாம் ஆளாகின என்பதையும், அதற்கான சான்றுகளையும் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொண்டிருப்பீர்கள்!
தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
இடையண்ண ஒலி பல்லினச் சாயல் பெறுதலுக்கு எடுத்துக்காட்டுகள் இரண்டினைக் கூறுக.
விடை
2.
தென் மாவட்டங்களில் வலுவாக நிலைபெற்றுவிட்ட ஒருங்கிணைவு மாற்றம் எது?
விடை
3.
ககர யகர மாற்றத்திற்கும், யகர சகர மாற்றத்திற்கும் எடுத்துக்காட்டுத் தருக.
விடை
4.
நெடில் தடையொலியை அடுத்து வரும் ரகர மெய் மறைவுக்கு இரு சான்றுகள் தருக.
விடை