தன்மதிப்பீடு : விடைகள் - II
2. |
பாரதியின் கட்டுரை
நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது? |
பாரதியாரின் கட்டுரை நடை உணர்ச்சியூட்டக் கூடியதும், எளியதும், தர்க்க ரீதியானதும், பேச்சுவழக்கு நிறைந்ததுமாக அமைகிறது. புதிய சொற்களைப் படைப்பதிலும் இவர் கைதேர்ந்தவர். எனவே புதிய சொல்லாட்சியையும் காணலாம். |