4.6 தொகுப்புரை

நண்பர்களே! இப்பாடத்தின் மூலம் என்னென்ன தெரிந்து கொண்டீர்கள் என்று எண்ணிப் பாருங்கள்

இலக்கியத்தில் பேசப்படும் கருத்து வாசகனைச் சென்றடைவதற்கு மொழியும் முக்கியப் பங்காற்றுகிறது.

ஒரே கருத்தில் பலர் இலக்கியம் படைக்கும் போது அப்படைப்புகளில் வேறுபடுவதற்குப் படைப்பாளனின் ஆளுமையும் வாழ்க்கைப் பின்னணியும் குறிப்பாக அவர்கள் மொழியைக் கையாளும் திறனும் முக்கியக் காரணிகளாகின்றன.

தமிழ் இலக்கியம் வடிவ நிலையில் பல மாற்றங்களைப் பெற்று வந்துள்ளது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என்று அவை அமைகின்றன.
கவிதையில் மரபுக் கவிதையாயினும் புதுக்கவிதையாயினும் சொல்லும் தொடரும் மொழியைக் கையாளும் விதத்தை மாற்றப் பெரும்பணி ஆற்றுகின்றன. உவமை, உருவகம், குறியீடு, கற்பனை போன்ற உத்திகள் இன்றியமையா இடம் பெறுகின்றன.
கட்டுரை மொழி செந்தமிழில் தொடங்கி, எளிய தமிழாகப் பாரதியால் உருப்பெற்று, மிகவும் எளிய நடையாக மு.வ.வின் நடையில் பரிணாமம் பெறுகிறது.
சிறுகதை மொழியில் கூறவரும் கருத்தைப் புரிய வைக்கத் தகுந்த சொற்பயன்பாடும் தொடரமைப்புக்களும் உதவுகின்றன.
நாவல்களில் இலக்கிய நடை வடசொல் கலப்புடைதாய், தனித் தமிழாய், அடுக்கு மொழியாய், கவர்ச்சி நடையாய், பேச்சுநடைச் சாயல் மிக்கதாய் வளர்ந்து இன்று மாறுபட்டதாயும் கலக மொழிநடையாயும் பரிணமித்து நிற்கிறது.
இவ்வாறு இலக்கியத்தில் சொல்ல வரும் கருத்தை மனத்தில் பதிய வைக்கவும் அக்குறிப்பிட்ட இலக்கியத்தை மக்கள் மனத்தில் நீங்கா இடம்பெறச் செய்யவும் மொழி குறிப்பிட்ட பங்காற்றுகிறது.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
புதுக்கவிதை மொழியில் இன்றியமையா இடம்பெறும் உத்தி யாது?
விடை
2.
பாரதியின் கட்டுரை நடை எத்தகைய கூறுகளைக் கொண்டது?
விடை
3.
ஜெயகாந்தனின் சிறுகதை மொழியில் காணப்படும் இரு கூறுகள் எவை?
விடை
4.
நாவல் இலக்கிய மொழிநடை உருவாக்கத்திற்கான காரணிகளுள் இரண்டைச் சுட்டுக.
விடை