தன்மதிப்பீடு : விடைகள் - II
2. |
அரபு மொழி தமிழில்
கலந்த சூழலை விளக்குக. |
அரபு மொழி முஸ்லிம்களின் சமயமொழி. திருக்குர்ரான் இம்மொழியில் உள்ளது. தமிழ் முஸ்லீம்கள் தங்களுக்காகவே சற்று மாற்றி எழுதிக் கொண்ட வடிவம் அரபுத் தமிழ் எனப்பட்டது. இஸ்லாமியர்களின் பேச்சுத் தமிழில் அரபுச் சட்ட, சமுதாயம் பற்றிய சொற்கள் காணப்படுகின்றன. பெர்சியன், உருது மொழிகள் மூலமும் அரபுச் சொற்கள் தமிழில் புகுந்தன. |