ஒரு மொழியில் பிற
மொழிச் சொற்கள் கலப்பதற்குக் காரணங்களாக, புதிய பொருட் பயன்பாடு, குறிப்பிட்ட
துறையைக் கற்றல், அரசியல், சமயம், வணிகம் காரணமாக ஏற்படும் தொடர்புகள்
முதலியவை அமையும்.
•
தமிழில் வடசொற்
கலப்பு காலந்தோறும் இருந்து கொண்டே வந்திருக்கிறது. தமிழில் வடசொற்
கலப்பு அளவிறந்த வகையில் உள்ளது.
•
முண்டா மொழி தமிழுடன்
உறவு கொண்ட தொன்மையான மொழி ஆகும்.
•
தமிழில் மேலைநாட்டு
மொழிகள் பலவும் கீழை நாட்டு மொழிகள் பலவும் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
•
பிற நாட்டு மொழிகள்
பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைத் தமிழ் செலுத்தியுள்ளது.
•
மொழிக் கலப்பு
என்பது உலக மொழி வரலாற்றில் தவிர்க்க முடியாததாகிறது. பிற மொழிகளுடன்
கலப்பு உள்ள மொழியே வளரும் என்பது மொழியியல் நியதியும் ஆகும்.
தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தமிழ்நாடு
சீனாவோடு கொண்டிருந்த தொடர்பினை விளக்குக.