6.6 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை நாம் தமிழ் உரைநடை வளர்ச்சி பற்றி அறிந்து கொண்டோம். ஐரோப்பியர்கள் தமிழ் உரைநடை வளர்ச்சிக்கு வித்திட்டதைப் படித்தோம்.

செய்யுள் / சூத்திரம் - விளக்கம் எழுதுதல் (கி.பி. 8 முதல்)

சமயம் பரப்ப - நூல் எழுதுதல் (கி.பி. 18 முதல்)

உரைநடையில் இலக்கியம் எழுதுதல் (கி.பி. 19 முதல்)

உரைநடையில் அறிவியல் முதலான அத்தனையும் எழுதுதல் (கி.பி. 20 முதல்)

என்னும் படி நிலை வளர்ச்சியில் தமிழ் உரைநடை வளர்ந்து உள்ளது. தமிழ் மொழியில் உரைநடை வளர்ந்தது ஒரு நிலை. இன்றோ உரைநடையில்தான் தமிழே வளர்கின்றது. அந்த அளவிற்கு உரை நடையின் தேவை அதிகரித்து உள்ளது எனலாம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1.
தமிழில் புதிய உரைநடை எக்காலத்தில் தோன்றியது? விடை
2.
புதிய உரைநடையின் மூன்று வகைகள் எவை?
விடை
3.
முற்றிலும் பேச்சுத் தமிழில் அமைந்த உரைநடைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது எது?
விடை
4.
கால்டுவெல் ஐயரின் உரைநடை எவ்வாறு அமைந்துள்ளது?
விடை
5.
ஐரோப்பியப் பாதிரிமார்கள் தம் தமிழ் உரைநடை எவ்வாறு அமைதல் வேண்டும் என்று கருதினர்?
விடை
6.
பாரதிக்குப் பின்னர் தமிழ் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்க மூவர் யாவர்?
விடை