3.4 தொகுப்புரை

நாட்டுப்புற இலக்கிய வகைமைப்பாடு என்ற இப்பகுதியில் நாட்டுப்புற வழக்காறுகள் தனித்தனியாகப் பகுத்துக் காணப்பட்டுள்ளன.

நாட்டுப்புற இலக்கிய வகைமை - வகை இவ்விரண்டிற்குமான வேறுபாட்டை விளக்கி வகை என்பது வகைமைக்குள் அடங்கும் என்பதை இப்பாடம் தெளிவுபடுத்துகிறது.

நாட்டுப்புற வழக்காறுகள் நாட்டுப்புற இலக்கியம்,நாட்டுப்புறக் கலைகள் என்று இரண்டாக வகைமைப்படுத்தப் பட்டுள்ளன.

நாட்டுப்புற இலக்கியத்தின் வகைகள் ஒவ்வொன்றாக விளக்கப்பட்டுள்ளது.

நாட்டுப்புறக் கலைகளையும் மூன்றாக வகைப்படுத்தி அவற்றையும் தனித்தனியாக விளக்குகிறது, இப்பாடம்.

நாட்டுப்புற வழக்காறுகளைப் பற்றி வகைமைப்படுத்திப் பார்ப்பதன் மூலம் அம்மக்களின் பண்பாட்டினை அறிய முடியும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - II
1)
நாட்டுப்புற இசையினை எதில் காணலாம்?
(விடை)
2)
நாட்டுப்புற மருத்துவத்தை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? அவை யாவை?
(விடை)
3)
சிற்பங்கள் எவற்றில் செதுக்கப்படுகின்றன?
(விடை)
4)
கூத்து எத்தனை வகைப்படும்?
(விடை)