தன் மதிப்பீடு :
விடைகள் - II
1. நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் தோன்றிய காலம் எது?
கதை
கேட்கும் ஆவல் மனிதனுக்கு இயல்பாக அமைந்துள்ளதாகும். சிறுவர்களும்
பெண்களும் கதை கேட்பதில் ஆவல் மிக்கவர்களாகக் காணப்படுகின்றனர். மனித
வாழ்க்கை தொடர்பான கதை மக்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன. கதையுடன்
இசையையும் கலந்து கேட்பதை மக்கள் மிகவும் விரும்பினர். இவ்விருப்பத்தின்
காரணமாகக் கதைப்பாடல்கள் அதிக அளவில் ஆசிரியர்களால் படைக்கப் பெற்றன
எனலாம். ஆயின் இக்கதைப்பாடல்கள் எப்பொழுது தோன்றின என்பதை உறுதியாகக்
கூறப் போதுமான சான்றுகள் இல்லை.
|