தன் மதிப்பீடு : விடைகள் - II

5. பகைவனும் பாராட்டும் வீரமுடையவன் தேசிங்கு என்பதை உம் பாடப் பகுதி கொண்டு சுட்டுக.

நண்பன், உறவினர், தன் குதிரை அனைவரையும் இழந்து தனித்து நின்று போரிட்ட தேசிங்கு எதிர்த்துப் போரிட எவருமில்லாத நிலையில் தன் வாளை மேலே எறிந்து தன் மார்பில் தாங்கி வீரமரணம் அடைகிறான். ஒளிந்திருந்த நவாபும் மற்றவரும் அவனது செயலைக் கண்டு வியந்து ‘உன்னைப் போலச் சூரன் ஒருவருமில்லை’ எனப் பாராட்டிக் கண்ணீர் விடுகின்றனர்.