தன்
மதிப்பீடு : விடைகள் - II
2. அருச்சுனன் - துரியோதனனின் பண்புநலன்களில்
உள்ள ஒற்றுமை, வேற்றுமைகளைக் குறிப்பிடுக.
அருச்சுனனும்
துரியோதனனும் பிற பெண்களை
விரும்புகின்ற குண நலனில் ஒன்றுபடுகின்றனர்.
ஆயின் அருச்சுனன் மணமாகாத பெண்களையே
நாடிச் செல்வதால் அவனுடைய தவறு கண்டிக்கப்படவில்லை. மாறாக, துரியோதனன்
மணமான
அருச்சுனனின் மனைவி சுபத்திரையை அடைய ஆசை
கொள்கிறான். ஆகையால் அவனுடைய தவறு
கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உள்ளாகிறது.
பிறனில் விழையாமை என்ற கோட்பாட்டில் நம்பிக்கை
உள்ள தமிழ்ச் சமுதாயம் துரியோதனின்
இந்த
ஆசையைத் தவறு எனக் கண்டிப்பதையே
ஏணியேற்றம் கதைப்பாடல் விளக்குகிறது. இத்தவறான
ஆசையால் அருச்சுனனும் துரியோதனனும்
வேறுபடுகின்றனர்.
|