தன் மதிப்பீடு : விடைகள் - II

3. அருச்சுனன் மீது அல்லி எதற்காகப் போர் தொடுக்கின்றாள்?

தன் மகன் புலந்திரனுக்கு ஒன்பது நாட்களுக்குள் பவளத்தேர் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிச் செல்கிறான் அருச்சுனன். அல்லியும் காத்திருக்கிறாள். ஆனால் தேரும் வரவில்லை, அருச்சுனனும் வரவில்லை. அருச்சுனன் மீது உள்ள அவநம்பிக்கை தலைதூக்கக் கோபம் கொண்டு போர் தொடுக்கின்றாள் அல்லி.