தன்
மதிப்பீடு : விடைகள் - I
4. நாட்டுப்புற இலக்கியங்கள்
சேகரிப்புப்பணி
தொடங்கப் பெற்றதற்கான காரணங்கள் யாவை?
ஐரோப்பியர்கள்
தங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட
மக்களைப் புரிந்து கொண்டால்தான் அவர்களைத்
தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்று கருதினர்.
அதற்கு உதவி செய்யும் என்ற நோக்கில் நாட்டுப்புறக்
கதைகளைச் சேகரித்தனர். மதத்தைப் பரப்ப வந்த
பாதிரியார்களும் மக்களைப் புரிந்து கொள்ளும்
நோக்கில் கதைகளைச் சேகரித்தனர். நாட்டுப்பற்று
காரணமாக நம் மக்களின் தனித்தன்மையை எடுத்து
விளக்கவும் கலை கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும்
இந்தியர்கள் சேகரிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
|