தன் மதிப்பீடு : விடைகள் - I

3. வெடி, அழிப்பாங்கதை ஆகிய சொற்கள் தமிழகத்தில் எவ்வெவ்ப் பகுதிகளில் வழக்கில் உள்ளன?

தமிழகத்தின் வட மாவட்டங்களான திருச்சி, அரியலூர், சேலம், தர்மபுரி, கடலூர், விழுப்புரம், முதலான பகுதிகளில் வெடி என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. புதுக்கோட்டை காரைக்குடி, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை மற்றும் அதற்குத் தெற்கே உள்ள மாவட்டங்களில் அழிப்பாங்கதை என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது.