தன் மதிப்பீடு : விடைகள் - II

1. நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு மரபுவழிக் கல்வி நிறுவனமாகச் செயல்படுகின்றன?

நாட்டுப்புறப் பாடல்கள் அடிப்படைக் கணக்குத் தேவைகளைக் கற்பிக்கின்றன. தகவல் தொடர்புச் சாதனங்களாகச் செயல்படுகின்றன. சமுதாயத்தில் வாழ்வதற்குத் தேவையான நன்னடத்தைகளைப் போதிக்கின்றன. எவற்றைச் செய்யக் கூடாது எவற்றைச் செய்யலாம் என்று தெளிவுபடுத்துகின்றன.