தன் மதிப்பீடு : விடைகள் - II

3. அடித்தள மக்களை நாட்டுப்புறப் பாடல்கள் அவர்களின் மன அழுத்தத்திலிருந்து விடுவிக்கின்றனவா? எவ்வாறு?

விடுவிக்கின்றன. பல்வேறு சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வு காரணங்களால் அடக்கு முறைகளுக்கு உட்படும் அடித்தள மக்கள் தங்கள் உள்ளக் குமுறல்களை, எதிர்ப்புக் குரல்களை நாட்டுப்புறப் பாடல்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றனர். அதன் வாயிலாக அவர்கள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுகின்றனர்.