தமிழகத்தில் காமன்
கோயில் வழிபாட்டோடு
தொடர்புடையதாக
இலாவணி நிகழ்த்தப்படுகிறது.
மன்மதன் எரிந்தான் என
ஒரு கட்சியினரும்,
மன்மதன் எரியவில்லை என
ஒரு கட்சியினரும்
வாதிடுவதாக
இலாவணிப்பாடல் அமைந்திருக்கும்.
டேப் என்ற
தோலிசைக் கருவியினை இசைத்துக்கொண்டு
ஒரு பிரிவினர் தங்களது
வாதத்தினைப் பாடலாகப்பாட,
அடுத்த பிரிவினர் அதற்குப்
பாடலிலேயே பதில் கூறுவதாக
இலாவணி நிகழ்ச்சி அமையும்.
இவ்வாறு வினாவிடைப் பாணியில்
இலாவணி நிகழ்ச்சி விடியவிடியத்
தொடர்ந்து கொண்டே இருக்கும்.
|