உடுக்கை என்னும்
இசைக்கருவியை இசைத்துக்
கொண்டு ஒரு
கதையைப் பாட்டாக எடுத்துரைப்பது
உடுக்கைப்பாட்டு எனப்படும்.
கொங்குமண்டலப் பகுதிகளில்
உள்ள கோயில் விழாக்களில், குறிப்பாக
அண்ணமார்சாமி வழிபாட்டில், உடுக்கைப்பாட்டு சிறப்பிடம்
பெறுகிறது.
இறந்தோருக்காவும் ஆவிவயப்பட்டோரைக்
குணப்படுத்துவதுற்கும்கூட
உடுக்கைப்பாட்டுப் பாடும் வழக்கம்
தமிழகத்தில் பரவலாக உள்ளது.
|