கம்பளத்துநாயக்கரால்
ஆடப்படும் ஆட்டம் சேவையாட்டம் ஆகும்
சேவை என்றால் சேவித்தல்,
வணங்குதல் என்று பொருள்படும்.
இறைவனை ஆட்டத்தின் மூலமாக வணங்குவதால் இது
சேவையாட்டம்
எனப்பட்டது. இராமாயணக் கதையைப் பாடலாகப் பாடிக்கொண்டு
விடியவிடிய இவ்ஆட்டம் ஆடப்படும். தேவதுந்தமி,
சேவைப் பலகை,
சேமக்கலம் ஆகிய
இசைக்கருவிகள்
ஆட்டத்தின் போது
பயன்படுத்தப் படும். சேவையாட்டக் கோமாளி
பாடலைப்பாடி
ஆட்டத்தைத் தொடங்க, ஏனைய
ஆட்டக்காரர்கள் பின்பாட்டுப்பாடி
வட்டமாக ஆடி வருவர்.
திருமால், பெருமாள், ரெங்கநாதர்
ஆகிய தெய்வங்களின்
வழிபாட்டில் சேவையாட்டம்
தவறாது
இடம்பெறாது.
|