தன் மதிப்பீடு : விடைகள் - II
 

4.

சைவசித்தாந்த நோக்கில் பசு, பதி, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றின் குறிக்கோளாகக் குயில்பாட்டில் காணப்பெறுபவை யாவை? குயில்பாட்டின் உள்ளுறை யாது?
 

குயில் - பசு; சேர இளவரசன் - பதி; காதல் - மாயை; மாடன் - ஆணவம்; குரங்கு - கன்மம் வேதாந்த நெறிப்படி இறைவனும் உயிரும் வேறு வேறு அல்ல. இரண்டையும் வேறு வேறாகக் காட்டுவது மாயையின் செயல். இந்த மாயை பக்தி, ஞான, கர்மயோகங்களால் விலகும். இதன்படி நோக்கக் குயில் நாத வடிவான இறைவனின் குறியீடு என்பது விளங்கும். கவிஞன் பாட்டின் பொருண்மை எனில், குயில் அப்பாட்டின் நாதம். இரண்டும் ஒன்றுபடத் தடையாயிருப்பது மாயை. மாயை மாடாகவும் குரங்காகவும் வந்து பொய்த் தோற்றங்களைப் படைக்கின்றது. அறிவு என்ற வாளின் வீச்சிலே பொய்த் தோற்றம் கலைகிறது.

முன்