4.6 தொகுப்புரை

கவிஞன் கடந்த கால இலக்கியப் படைப்பு நெறியிலேயே போவதை விட்டுப் புதிய நெறிகளில் முயலும் போது, மொழிக்குப் புதிய உத்திகளும் படைப்புகளும் கிடைக்கின்றன. பழைய செய்திகளை நிகழ்காலத் தேவைகளை ஒட்டி மறுவார்ப்புச் செய்வதற்குக் கவிஞனுக்குப் பேராற்றல் வேண்டும். பாரதியிடம் அப்பேராற்றல் இருந்ததனை முப்பெரும் பாடல்கள் காட்டுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

குயில்பாட்டு எந்த இடத்தில் தோன்றியது?

[விடை]

2.

குயில் இரண்டாம் முன்றாம் நாட்களில் யாது செய்தது?

[விடை]

3.

குயிலின் முற்பிறவியில் நிகழ்ந்தது யாது?

[விடை]

4.

சைவசித்தாந்த நோக்கில் பசு,பதி, ஆணவம்,  கன்மம், மாயை ஆகியவற்றின் குறிக்கோளாகக் குயில்பாட்டில் காணப் பெறுபவை யாவை? குயில்பாட்டின் உள்ளுறை யாது?

[விடை]

5.

பாரதியின் சமயம் எத்தகையது?

[விடை]