2.6 தொகுப்புரை

இந்தியப் பெரு நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பாரதியார் அரசியலில் நுழைந்த சூழல், விடுதலை இயக்கத்தில் அவர் மேற்கொண்ட பணி, தீவிரவாதியாகச் செயல்பட்ட பாரதி மகாத்மா காந்தியின் அறப்போரில் ஈடுபாடு கொண்டு மிதவாதியாகத் தம்மை மாற்றிக் கொண்ட நிலை முதலியன பற்றி இப்பாடத்தில் இதுவரை படித்தறிந்தீர்கள். மேலும் பெண்களின் விடுதலை, பெண் உரிமை, சாதி விடுதலை, சமய விடுதலை, அரசியல் விடுதலை பற்றிப் பாரதியார் தம் பாடலில் கூறியுள்ள கருத்துகளையும், உண்மையான விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை அல்ல; சாதி, சமய, இன, பால் பாகுபாடுகளில் இருந்து விடுபடுவதே உண்மையான விடுதலை என்பதையும் தெளிவுபடுத்த இப்பாடத்தில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

பாரதி சாதிகள் இல்லையடி பாப்பா என்று குழந்தையைப் பார்த்துப் பாடியதன் காரணம் கூறுக.

[விடை]
2.

பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ என்னும் கதை எதை உணர்த்துகிறது?

[விடை]
3.

சமயங்கள் எதற்காகத் தோன்றின?

[விடை]
4.

பாரதியார் எதைத் தெய்வமென்று காட்டுகிறார்?

[விடை]
5.

அரசியல் விடுதலை பெறுவதற்கான சிறந்த வழி எது?

[விடை]