2.6 தொகுப்புரை  
 

மாணவர்களே! பாரதிதாசன் கனவு கண்ட சமுதாயத்தைப் பற்றி இதுவரை விரிவாகப் பார்த்தோம். அச்சமுதாயம்,
 

  • சாதி மதங்களற்றது

  • வருணப் பாகுபாடற்றது

  • சமத்துவத் தன்மை உடையது

  • மூடப்பழக்கங்கள் இல்லாதது

  • சுயமரியாதை மிக்கது

  • உழைப்பவர்க்கு மதிப்பளிப்பது

  • எல்லோரும் கற்றவர்களாகத் துலங்குவது

இந்தச் சமுதாயம் இன்றும் முழுமையாக உருவாகிவிடவில்லை. அதனை நோக்கிய பயணம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘தடைக்கற்கள் உண்டு என்றாலும் தடந்தோள் உண்டு’ எனப் பாரதிதாசன் கூறுவதுபோல் மன உறுதியோடு அதனை அடைய முயலவேண்டும்.

(448kb)

தன்மதிப்பீடு: வினாக்கள் - II

 

  1. பகுத்தறிவுப் பகலவன் என்று போற்றப் பெற்றவர் யார்?
  1. அகமணமுறை என்பதன் பொருள் யாது?
  1. புரட்சித் திருமணத்தின் ஏழு கூறுகள் யாவை?
  1. கல்வியில்லாத சமுதாயம் எது போன்றது?