பாடம் -3

C01233  குறவஞ்சி இலக்கியம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

குறவஞ்சி இலக்கியத்தின் பொதுவான இலக்கணமும் அது பெயர் பெறும் முறையும் விளக்கப்படுகின்றன. குறவஞ்சியின் தோற்றத்திற்கான கூறுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது.

இப்பாடத்தில் திருக்குற்றாலக் குறவஞ்சி பற்றி விரிவாக விளக்கப்படுகிறது. திருக்குற்றாலக் குறவஞ்சியின் அமைப்பு, பொருள், தலைவனாகிய குற்றாலநாதரின் சிறப்பு, உலாவைக் காணும் பெண்கள் நிலை, தலைவியாகிய வசந்தவல்லியின் நிலை, அனைத்தையும் விளக்கமாகக் குறிப்பிடுகிறது.

குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெறும் குறத்தியின் சிறப்பு, அவள் நாட்டு வளம், நகர்வளம், குறத்தி வசந்தவல்லிக்குக் குறி கூறல், சிங்கன், சிங்கி பற்றிய செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.


இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • குறவஞ்சி இலக்கிய வகையின் பெயர்க்காரணம், இலக்கணம் ஆகியவற்றை இனங்காணலாம்.

  • குறவஞ்சி இலக்கிய வகையின் தோற்றம் பற்றி விளங்கிக் கொள்ளலாம்.

  • குறவஞ்சி இலக்கிய வகையின் அமைப்பையும் பாடு பொருளையும் விளக்க இயலும். குறவஞ்சி இலக்கிய வகையின் சிறப்பினைத் திறம், உவமை நயம், ஓசைச்சிறப்பு ஆகியவற்றின் மூலம் அடையாளம் காணலாம்.

  • பண்டைத் தமிழர்களின் பழக்கவழக்கங்களைத் தொகுத்துக் கூற முடியும்.

பாட அமைப்பு