|
தமிழில் மெய்யெழுத்துகள்
பதினெட்டில், முதலில்
அமைந்துள்ள பத்து மெய்களும் ஒரு வல்லினம் ஒரு
மெல்லினம் என்ற அமைப்பில் அடுத்தடுத்து
அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் பின்னர் இடையின
எழுத்துகள் ஆறும் வரிசையாக அமைந்துள்ளன.
கடைசியில் இருக்கும் இரண்டு எழுத்துகளும் ஒரு
வல்லினம் ஒரு மெல்லினம் என்ற அமையில் உள்ளன.
இந்த அமைப்பு முறை மெய்யொலிகள் பிறக்கின்ற
முறையில் அமைந்திருப்பது நுட்பம் ஆகும். |