3.3 மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும்

மெய்யெழுத்துகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளை ஒப்பிட்டுக் காணலாம். முதலில் அவை இரண்டிற்கும் இடையில் காணப்படும் ஒற்றுமைகளைக் காண்போம்.

3.3.1 ஒற்றுமைகள்

(1)

இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன.

(2)

இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து தோன்றுகின்றன என்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன.

3.3.2 வேற்றுமை

தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகிறது.

நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. தமிழில் மெய்யெழுத்துகளின் வரிசை முறையில் (நெடுங்கணக்கில்) காணப்படும் நுட்பத்தை விளக்குக. விடை
2. மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்துகள் யாவை? விடை
3. நன்னூல் மெய்யொலிகளின் பிறப்பிடம் குறித்துத் தெரிவிக்கும் செய்திகள் யாவை? விடை
4. க் ங், ச் ஞ், ட் ண் ஆகிய மெய்கள் பிறக்கும் முறையை விளக்குக. விடை
5. த் ந், ப் ம், ற் ன் எவ்வாறு பிறக்கின்றன? விடை
6. வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும் நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக விடை