6)

வல்லின மெல்லின மெய்களின் பிறப்பிடம் குறித்துத் தொல்காப்பியமும், நன்னூலும் தெரிவிக்கும் கருத்துகளின் ஒற்றுமை வேற்றுமைகளை விளக்குக

ஒற்றுமைகள் :

(1)

இரு நூல்களும் மெல்லின மெய்கள் மூக்கில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றன.

(2)

இரு நூல்களும் இடையின மெய்கள் கழுத்தில் இருந்து பிறக்கின்றன என்று உரைக்கின்றன.

வேற்றுமை :

தொல்காப்பியம் வல்லின மெய்கள் தலையில் இருந்து தோன்றுகின்றன என்று கூறுகின்றது.

நன்னூலோ வல்லின மெய்கள் நெஞ்சில் (மார்பு) இருந்து பிறக்கின்றன என்று தெரிவிக்கிறது.

முன்