5) | த் ந், ப் ம், ற் ன் எவ்வாறு பிறக்கின்றன? |
மேல்வாய்ப் பல்லின் அடிப்பகுதியை நாவின் நுனியானது நன்கு பரந்து ஒற்றும் போது த், ந் என்னும் மெய்கள் பிறக்கின்றன. இரு இதழ்களும் ஒன்றோடு ஒன்று இயைந்து பொருந்தும் போது ப், ம் பிறக்கும். மேல்வாயை நாவின் நுனி நன்றாகப் பொருந்தினால் ற், ன் பிறக்கும். |